எறும்புகளை உண்டதால் சிறிய உருவம் பெற்ற டைனோசர்கள்? ஆய்வில் வெளியான சுவாரசிய தகவல்!


டைனோசர்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது அதன் ராட்சத உருவம் தான். ஆனால், சீன ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று நடத்திய சமீபத்திய ஆய்வில் அல்வாரெஸ்ஸர் (Alvarezsaur) டைனோசர்கள் எறும்புகளை சாப்பிட தொடங்கிய பின்பு சிறிய உருவத்தை பெற்றதாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

டைனோசர்கள் பிரம்மாண்ட உருவம் கொண்டவை தான். ஆனால், அனைத்து வகை டைனோசர்களும் அத்தகைய பிரமாண்ட உருவத்தை கொண்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் PhD மாணவராகவும் பெய்ஜிங்கில் உள்ள Institute of Vertebrate Paleontology and Paleoanthropology-ல் பணிபுரிபவர் சிச்சுவான் கின் (zinchuan qin).

இவர் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சி ஒன்றில் சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எறும்புகளை உண்ணும் டைனோசர்களின் உருவ அளவு விரைவாக சுருங்கிவிட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ள கொரோனா வைரஸ்: உலக அப்டேட் இதோ!

சீனா, மங்கோலியா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலும் ஜுராசிக் பிற்பகுதியில் கிரடேசியஸ் வயது வரை அல்வாரெஸ்ஸர் வகை டைனோசர்கள் வாழ்ந்த உள்ளன.

இது சுமார் 160 முதல் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு. மெல்லிய தேகம் மற்றும் இரண்டு நீளமான கால்களுடன் இந்த வகை டைனோசர்கள் பூமியில் வாழ்ந்து உள்ளன.

Also Read  1,46,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முற்றிலும் புதிய மனித இனம் கண்டுபிடிப்பு..!

இவை பல்லிகள், ஆரம்பகால பாலூட்டிகள் மற்றும் குழந்தை டைனோசர்களை தங்கள் உணவாக சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளன.

இவற்றின் மாதிரியை பகுப்பாய்வு செய்த போது அது 10 முதல் 20 கிலோ வரை அல்லது தோராயமாக ஒரு பெரிய வான்கோழி அளவு முதல் சிறிய நெருப்புகோழி அளவு வரை இருந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அல்வாரெஸ்ஸர் வகை டைசோசர்களின் இந்த உருவ மாற்றத்திற்கு காரணம் அவை எறும்பு தின்னிகள் ஆக மாறிவிட்டது தான் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

கிரடேசியஸ் காலத்தில் உணவுகளுக்கு ஏற்பட்ட போட்டியின் விளைவு இந்த டைனோசர்கள் எறும்பு உண்ணும் விலங்குகளாக மாறியிருக்கலாம் என கருதப்படுகிறது.

Also Read  வயதோ 70…! ஆனால் ஓடியதோ 100 மாரத்தான்…! சீனாவில் கலக்கும் சூப்பர் பாட்டி…!

இந்த டைனோசர்கள் மலர் செடிகளை உண்ணவில்லை. எனவே அவை எறும்புகள் மற்றும் கரையான்களை உள்ளிட்ட புதிய வகை பூச்சிகள் உருவாக வழிவகுத்தன.

சுற்றுச்சூழல் அமைப்புகளின் மறுசீரமைப்பு தான் கிரடேசியஸ் காலத்தின் பிராந்திய புரட்சி என்று அழைக்கப்படும். இது நவீன வகை காடுகள் மற்றும் வனப்பகுதிகளின் தோற்றத்தை குறிக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

Lekha Shree

2020ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி போட்டி : மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸாவுக்கு மகுடம்

sathya suganthi

கொரோனா அதிகரிப்பு – மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு…!

Devaraj

புளூ மூனை பார்க்கத் தயாரா?

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் தரும் “கடவுளின் கை” – செவிலியரின் புதுவித தெரபி…!

Devaraj

இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை: 6 லட்சத்துக்கும் மேலாக உயர்வு

Tamil Mint

10 மாதங்களில் 43 முறை கொரோனா தொற்றுக்கு உள்ளான முதியவர்!

Shanmugapriya

ஒரே பிரசவத்தில் 10 குழந்தை…! எல்லாம் பொய்யா…! வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்…!

sathya suganthi

அமேரிக்காவில் தொடரும் இனவெறி தாக்குதல்….

VIGNESH PERUMAL

விரைவில் அறிமுகமாகும் Corona Nasal Vaccine! எங்கு தெரியுமா?

Lekha Shree

கோடியில் ஒரு நிகழ்வு – கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்!

Lekha Shree

85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ் – வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree