அமராவதி அணையில் உபரி நீர் திறப்பு: கரையோர மக்கள் பதற்றம்


மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அமராவதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டவிருக்கிறது. அதனால், அமராவதி அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. மேலும் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. வனப்பகுதியில் இருந்து ஓடி வருகின்ற அமராவதி ஆற்றை தடுத்து இந்த அணை கட்டப்பட்டது. இதனால் அதிக அளவு தண்ணீர் சேமிக்கப்படுவதுடன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயமும் வளர்ச்சி அடைந்துள்ளது. 

பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திட்டத்தின் மூலம் 54 ஆயிரத்து 637 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக பாசன வசதியை அளித்து வருகிறது.

ஆண்டுதோறும் ஏற்படுகின்ற வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை மற்றும் புயல் மழையின் போது அணை அதிகப்படியான நீர்வரத்தை பெரும். அந்தவகையில் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த தென்மேற்கு பருவமழையின் போது அணை அதன் முழு கொள்ளளவை 2 முறை நெருங்கியது.

Also Read  வெடித்து சிதறிய பலூன் -பிரதமர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தீ காயங்களுடன் தப்பிய நிர்வாகிகள் .

அதைத்தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வந்தது.

இந்த நிலையில் புரெவி புயல் தீவிரமடைந்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்  அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. 

அணையின் நீர் இருப்பு உயர்ந்து நேற்று முன்தினம் இரவு 85 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடிக்கு மேலாக இருந்ததால் உபரி நீர் திறப்பதற்கான சூழலும் உருவாகியது.

அதைத்தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பாபுசபரீஸ்வரன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைப்பகுதியில் இரவு-பகலாக முகாமிட்டு வந்தனர். 

Also Read  யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்.... "நம் இன்பம், துன்பம் இரண்டு நமக்கு ஒன்றே"... இறப்பிலும் இணைபிரியாத அன்பு.....

மேலும் அமராவதி ஆற்றின் கரையோரம் வசித்து வருகின்ற பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அணையில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை கருவி மூலம் ஒலியும் எழுப்பப்பட்டது. 

நேற்று பகல் 12 மணி அளவில் அணை நீர்மட்டம் 88 அடியை கடந்தது. அதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணையில் உள்ள 9 கண் மதகுகளில் 3 மதகுகள் வழியாகவும், பிரதான கால்வாய் மூலமாகவும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. 

Also Read  மிகப்பெரிய திட்டம் ஒன்றினை கொண்டு வரப் போகிறோம்: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆருடம்.

நேற்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையின் மொத்த நீர்ப்பரப்பில் 88 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 232 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. 

அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றிலும், பிரதான கால்வாயில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சசிகலாவின் மற்றொரு ஆடியோவால் மீண்டும் பரபரப்பு…!

Lekha Shree

சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் அப்பாவு.. திமுக அறிவிப்பு..

Ramya Tamil

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

Tamil Mint

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி பரபரப்பு பேட்டி!!

Tamil Mint

தமிழகத்தில் இன்று 1,303 பேருக்கு கொரோனா தோற்று உறுதி!

suma lekha

தன் பிறந்த நாளில் விஜய்-ஸ்ருதியை சவாலுக்கு இழுத்த மகேஷ்பாபு !

Tamil Mint

“நீட் நல்லது” – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Lekha Shree

செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் தண்ணீர் திறப்பு

Tamil Mint

வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு…! என்னென்ன சேவைகள் ரத்து…!

Devaraj

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரேநாளில் 478 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Mint

கொரோனா நிவாரண நிதி: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை…!

sathya suganthi