a

பிரபல தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிய அமேசான்…!


ஹாலிவுட்டின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் எம்ஜிஎம் (metro goldwyn mayer). இந்த எம்ஜிஎம் நிறுவனத்தை 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அமேசான் வாங்கியுள்ளது. இது இந்திய ரூபாயில் சுமார் 61,434 கோடி ஆகும்.

உலக அளவில் திரைப்படத்துறையில் நிகழ்ந்த மிகப்பெரிய வர்த்தகமாக இந்த வர்த்தகம் பார்க்கப்படுகிறது. ஓடிடி தளங்களில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் நெட்பிளிக்ஸ்க்கு கடும் சவாலை அமேசான் பிரைம் இதன்மூலம் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

Also Read  ஆக்‌ஷன் நாயகனுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்...! வெளியான சூப்பர் அப்டேட்!

எம்ஜிஎம் பிலிம்ஸ் 1924 இல் தொடங்கப்பட்டது. முதல் வருடம் இந்த நிறுவனம் தயாரித்து விநியோகித்த படங்கள் எண்ணிக்கை சுமார் 29. அன்றிலிருந்து இன்றுவரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக எம்ஜிஎம் விளங்கி வருகிறது.

சுமார் நான்காயிரம் திரைப்படங்கள் இந்த நிறுவனத்தின் உடமையாக உள்ளன. இதில் உலக அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பல திரைப் படங்களும் அடக்கம். குறிப்பாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள்.

Also Read  ஜீ டிவிக்கு சென்ற 'குக் வித் கோமாளி' அஸ்வின் ! முழு விவரம் இதோ..!

உலகம் முழுவதும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இப்படங்கள் அமேசானின் உடைமையாகியுள்ளன. அதனால், இனி அமேசான் ஓடிடி தளத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களை ரசிகர்கள் பார்க்கலாம். இதேபோல் சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த ராக்கி சீரிஸ் பட உரிமையும் அமேசான் வசமே உள்ளது.

அமேசான் பிரைம் வீடியோவுக்கு போட்டியாக உள்ள நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், எச்பிஓ மேக்ஸ் போன்றவை பெரும் முதலீடுகளை செய்து வருகின்றன. அவற்றை ஈடு செய்ய அமேசானும் இதுபோன்ற பிரம்மாண்ட முதலீடுகள் செய்வது அவசியமாகிறது.

Also Read  புர்கா அணிய தடை…! இஸ்லாமிய பள்ளிகளை மூடல்…! இலங்கை அரசு நடவடிக்கை

திரைத்துறையில் மட்டுமின்றி விளையாட்டிலும் அமேசான் தற்போது கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. நேஷனல் புட்பால் லீக்கை ஒளிபரப்பும் உரிமையை அமேசான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தளபதி 65 திரைப்பட கதாநாயகிக்கு கொரோனா…!

Devaraj

3 வயது குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி..! எங்கு தெரியுமா?

Lekha Shree

இளவரசர் பிலிப்-ன் மறுமுகம்! – சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கண்டனங்கள்!

Lekha Shree

ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல்: ”100% இருக்கைகள் குறைக்கப்பட்டால் மாஸ்டர் மட்டுமே வெளியாகும்”!

Tamil Mint

‘குக்கு வித் கோமாளி’ செட்டுக்கு மீண்டும் சென்ற ஷிவாங்கி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

தலைசுற்ற வைக்கும் மாஸ்டர் பட டிக்கெட் விலை! ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்காது போல…

Tamil Mint

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆண்டி இந்தியன்’ படத்திற்கு தடை- மாறனுக்கே ஆப்பா? ரசிகர்கள் கேலி…

Jaya Thilagan

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்…

Ramya Tamil

ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் அதிகரிக்கும் பதற்றம்…! – 38 பேர் சுட்டுக்கொலை…!

Devaraj

ஆன்லைனில் கசிந்த 50 கோடி பேஸ்புக் கணக்கு விவரங்கள் – ஹேக்கர்கள் அட்டூழியம்

Devaraj

திடீரென கருப்பு நிறத்தில் மாறிய அன்னப் பறவை! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Shanmugapriya

இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை கண்டித்து மலேசியாவில் தீவிரமடையும் போராட்டம்!

Lekha Shree