சென்னை, கோவை உட்பட 35 நகர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு… அமேசான் நிறுவனம் முடிவு..!


இந்தியாவில் சென்னை, கோவை, பெங்களூரு, லூதியானா, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, நொய்டா, அமிர்தசரஸ், புனே உள்ளிட்ட 35 நகரங்களில் உள்ள 8 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அமேசான் நிறுவனத்தின் மனிதவளத்துறைத் தலைவர் தீப்தி வர்மா கூறும்போது, ”இந்தியாவில் சென்னை, கோவை, பெங்களூரு, லூதியானா, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, நொய்டா, அமிர்தசரஸ், புனே உள்ளிட்ட 35 நகரங்களில் உள்ள 8 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறோம். தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். மனிதவளம், நிதி, சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் இளைஞர்களை தேர்வு செய்ய இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  சர்வதேச இணையதளங்கள் திடீர் முடக்கம்… காரணம் இதுதான்..!

மேலும், “இந்தியாவில் , 2025-ம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளது. கொரோனா காலத்திலும் 3 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். 16-ம் தேதி இந்தியாவில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் முகாம் நடத்த இருக்கிறது. காணொலி மூலம் நடக்கும் இந்த முகாமில், 140 அமேசான் ஊழியர்கள் பயிற்சி முகாம்களையும் நடத்த உள்ளனர்” என்று அமேசான் நிறுவனத்தின் மனிதவளத்துறைத் தலைவர் தீப்தி வர்மா கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அனைத்து உதவிகளும் கிடைக்கும்; அசாம் முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி

Jaya Thilagan

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி இன்று கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tamil Mint

பாஜக தேசிய மகளிரணி தலைவர் ஆனார் வானதி சீனிவாசன், குஷ்புவுக்கும் விரைவில் புது பதவி

Tamil Mint

இடைத்தேர்தல் முடிவுகள்:

Tamil Mint

நாட்டிற்கே மோடி பெயர் வைக்கும் நிலை வரும் – கொதித்த மம்தா!

HariHara Suthan

பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை…‌ 1 லட்சம் சம்பளம்….

VIGNESH PERUMAL

’மேகதாது அணை கட்ட விரைந்து அனுமதி வழங்குக’: கர்நாடகாவின் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை!

mani maran

நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு ட்வீட் !!!

Tamil Mint

மனிதர்களை அடுத்து விலங்குகளை வாட்டும் கொரோனா – விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி…!

Lekha Shree

மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!

Lekha Shree

பிபிசியின் ‘100 பெண்கள் 2020’ பட்டியலில் ‘தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் இசைவாணி இடம்பிடித்துள்ளார்

Tamil Mint

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி: ஆதரவு கரம் நீட்டும் ரஷ்யா, சீனா.?

mani maran