அமேசான் தனித் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடோன்களாக மாற்றப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்: திருப்பூர் சுப்பிரமணியம்


தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களுக்குத் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், திரையரங்கு உரிமையாளர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார்கள். 

கடந்த நவம்பர் 10-ம் தேதி 50% இருக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால், முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால், திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. 

இதனால் தமிழகமெங்கும் ஒற்றைத் திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் இத்திரையரங்குகளை கைப்பற்றி வருவதாக கூறப்படுகிறது.

Also Read  துப்பாக்கி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: மாதவரம் எஸ்.ஐ. கைது…!

“அமேசான் தனித் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடோன்களாக மாற்றப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் திரையிட்டால் கிடைக்கும் லாபத்தைப் போல இரண்டு மடங்கு வாடகை தரத் தயாராக இருக்கிறார்கள். இப்படி மாறினால் திரையரங்குகள் லாபகரமாக மாறும். ஆனால், திரைப்படங்கள் திரையிடத் திரையரங்குகள் இருக்காது.

திரையரங்கில் திரையிடாமல் வேறு தளத்தில் படங்கள் வெளியானால் நடிகர்களுக்கு எந்த ஸ்டார் பட்டமும் போட முடியாது. இந்தச் சம்பளமும் வாங்க முடியாது. ஆகவே, அனைவரும் ஒன்றுசேர்ந்து திரையரங்குகளைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். இதை நான் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவராக எழுதவில்லை. ஒரு சினிமா ரசிகனாக எழுதுகிறேன்” என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

Also Read  தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எம்எல்ஏ பிரபு திருமண விவகாரத்தில் தீர்ப்பு தள்ளி வைப்பு

Tamil Mint

அரபிக்கடலில் உருவாகும் டவ்-தே புயல் – தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

மோடியை பின்னுக்கு தள்ளி யூடியூப்பில் சாதனை படைத்த ஸ்டாலின்!

Lekha Shree

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை அறிவித்தார் முதல்வர்

Tamil Mint

செயற்கை வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர்..! பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் அருள்பாலித்த புகைப்படங்கள்…!

Devaraj

இந்த விஷயத்தில் அப்பாவை மிஞ்சிய உதயநிதி… என்னன்னு தெரியுமா..?

Ramya Tamil

கொரோனா ஊரடங்கு தளர்வு : ரயில்கள் மீண்டும் இயக்கம்

sathya suganthi

திடீர் மழையால் திக்குமுக்காடிய தலைநகரம்.!

mani maran

இன்னோவா கார் இல்ல ஏரோப்பிளேன் வாங்கி குடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது – நாஞ்சில் சம்பத்

Tamil Mint

தமிழக அமைச்சரவையில் டெல்டா மாவட்டத்தினருக்கு வாய்ப்பு இல்லை…!

Lekha Shree

மதுரையில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பு!

Lekha Shree

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி..! ஏன் தெரியுமா?

Lekha Shree