ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன்: ‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.!


தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி, இந்திய வரலாற்றில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்கவைத்து கொண்ட ஒப்பற்ற தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று. 

அவரின் பல்துறை புலமை இன்றைக்கும் சிலிர்ப்பை உண்டு செய்கிறது. பொருளாதாரம், சட்டம், வரலாறு, சமூகவியல், புவியியல் என எண்ணற்ற துறைகளில் தனக்கான தேடலை விடாமல் செய்தவர். 

அதுமட்டுமல்லாது இந்திய அரசியல் சட்டத்தை ஒற்றை ஆளாக கிட்டத்தட்ட செதுக்கி உருவாக்கி இன்றளவும் அதற்கான பெருமையை தக்கவைத்துள்ளார். அவர் எழுதிய எந்த கட்டுரையிலும் இந்த நாட்டின் மீது வெறுப்பை உமிழ்கிற வார்த்தைகளை நம்மால் காண இயலாது. 

மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்கிற முனைப்பு அவரின் எழுத்திலும் சிந்தனையிலும் ஒளிர்விடுவதை காண இயலும். அம்பேத்கருக்கு ‘நவீன புத்தர்’ என்ற பட்டம் அவரது இளமை காலத்தில் புத்த மதத்தின் மிகமுக்கிய துறவியான மஹாந்த் வீர் சந்திரமணி என்பவரால் வழங்கப்பட்டது. 

Also Read  தமிழகம் முழுவதும் இன்று 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் பன்னீர்செல்வம்

இந்தியாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படும் அம்பேத்கர், 64 பாடங்களில் முதுகலை பட்டம் பயின்றவர். மேலும், இந்தி, பாலி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம், ஃபிரன்ஞ், ஜெர்மன், பெர்ஷியன் ஆகிய 9 மொழிகளில் புலமை பெற்றவராகவும் அம்பேத்கர் திகழ்ந்தார். 

ஒடுக்கப்பட்ட வர்கத்திலிருந்து பலரும் எட்ட முடியா உயரங்களை அடைந்ததனாலேயே இவருக்கு இத்தனை சிறப்பு என்று சொல்லலாம். 

Also Read  மாமல்லபுரம் சுற்றுலா பயணிகளுக்கு இன்று திறப்பு!!

 

பள்ளிகளுக்குள்ளே அனுமதிக்கப்படாத ஒருவர் பிற்காலத்தில் நாட்டின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக கருதப்பட்டு, இந்திய சட்டத்தையே தனி ஒருவராக இயற்றினார் என்றால் அது சாதாரண காரியம் அல்ல. இவரது இன்றியமையா புகழுக்கு இதையே சான்றாக கூறலாம். 

சாதி, மதம், வறுமை போன்ற எதுவும் ஒருவரின் கல்வியையும் சிந்தனைகளையும் தடுத்துவிட முடியாது என்கிற நம்பிக்கையே அவரது வாழ்வும் சாதனைகளும் நம் இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் மிகப்பெரிய போதனை என்றால் அது மிகையாகாது. 

அவர் சிறுவயதில், தாழ்த்தப்பட்டவர் என்பதால் அனுபவித்த கொடுமைகளே அவரை செதுக்கியது. படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்பும் கூட இந்த சாதிக்கொடுமை அழியவில்லை. அங்கும் பல இன்னல்களை சந்தித்த பின்னரே இவ்வளவு சாதனைகளை அவர் படைத்தார். 

இவரது வாழ்வே நமக்கு ஒரு பாடம்தான். 

Also Read  வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நெட்டிசன்கள்! இது வேற லெவல்!

அவரது சோசியலிச கருத்துகள் முன்மொழிவது ஒன்றுதான். அது சாதிகளை கடந்து மக்கள் ஒன்றுபட வேண்டும் என்பதும் தீண்டாமை என்னும் மடமையை கொளுத்த வேண்டும் என்பதும் தான். 

ஒப்பற்ற மாசற்ற இந்த இன்றியமையாத நாயகனை எடுத்துக்காட்டாக கொண்டு வாழ்வில் தடைகளை தகர்த்தெறிந்து சாதனைகள் படைப்போம்.!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குடிமகன்கள் அலப்பறை – போதையில் போலீஸ் ஜீப் அடித்து உடைப்பு!

Lekha Shree

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பிளேபாய் – உதயநிதி கமெண்ட்

Tamil Mint

கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டேன்: கே.பி.அன்பழகன்

Tamil Mint

பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!

suma lekha

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

sathya suganthi

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மே மாதத்தில் 38 – 48 லட்சத்தை தொடும்..!

Lekha Shree

பள்ளிகளை தற்போது திறக்க முடியாது: அமைச்சர்

Tamil Mint

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

Tamil Mint

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை…!

Devaraj

தூது செல்ல நான் தயார்.! உங்க மாமா அனுமதிப்பாரா.? தயாநிதி மாறனை கலாய்த்த அண்ணாமலை.

mani maran

நாங்கள் ஜோசியம் பார்க்கவில்லை: ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

Tamil Mint

வாட்ஸ்அப் போலவே ‘சாய்‘… ராணுவ வீரர்களுக்காக புதிய செயலி

Tamil Mint