திமிங்கலத்தின் வாந்திக்கு இவ்வளவு மதிப்பா? முழு விவரம் இதோ..!


கேரள மாவட்டம் திருச்சூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ‘திமிங்கல வாந்தி’ என்று அழைக்கப்படும் ஆம்பெர்கிரிஸ் (Ambergris) இருப்பதைப் பார்த்து அதிகாரிகள் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆம்பெர்கிரிஸ் சுமார் 19 கிலோ எனவும் இது சர்வதேச வாசனை சந்தையில் 30 கோடி வரை போகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read  ஜூலை 31ம் தேதிக்குள் 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்

இது குறித்து பேசிய அதிகாரிகள், “கேரளாவில் ஆம்பெர்கிரிஸ் கடத்த முயன்ற ஒரு குழு பிடிபடுவது இதுவே முதல்முறை.

கேரள வன பறக்கும் படை மற்றும் வனவிலங்கு குற்ற கட்டுப்பாடு பணியகம் நடத்திய நடவடிக்கையின் பின்னர் மூன்று பேர் கொண்ட குழு கைது செய்யப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் திருச்சூரை சேர்ந்த ரபிக், பைசல்மற்றும் எர்னாகுளத்தை சேர்ந்த ஹம்சா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கறுப்புச் சந்தையில் ஆம்பெர்கிரிஸ் விற்பனை செய்யபாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சில வன அதிகாரிகள் சந்தேக நபர்களை ஆம்பெர்கிரிஸ் விற்க விரும்புவது போல அணுகி பின்னர் அவர்களைப் பிடித்தனர்” என கூறினர்.

Also Read  பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுகிறதா இந்திய கிரிக்கெட் அணி?

பொதுவாக ‘திமிங்கல வாந்தி’ என்று அழைக்கப்படும் ஆம்பெர்கிரிஸ் பழுப்பு நிற மெழுகு பொருள். இது திமிங்கலங்களின் அடிவயிற்றில் உருவாகிறது.

திமிங்கலங்கள் வாந்தியில் இருந்து கிடைக்கும் இந்தப் பொருள் கோடிக்கணக்கில் விலை மதிக்கத்தக்கது. மத்திய கிழக்கில் ஓமன் கரையோரப் பகுதி ஆம்பெர்கிரிஸ்க்கு பிரபலமானது.

Also Read  மூட நம்பிக்கையால் முடிவுக்கு வந்த வாழ்க்கை…

இந்த ஆம்பெர்கிரிஸ் வாசனை திரவிய சந்தையில் தங்கத்தைப் போல மதிப்புமிக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐ.நா. வின் மனித மேம்பாட்டு குறியீடு: இந்தியா சரிவு!

Tamil Mint

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை

Tamil Mint

இந்தியா: ஒரே நாளில் 4,002 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

பணம் எடுக்க கட்டுப்பாடு தற்காலிகமானது: லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாக அதிகாரி தகவல்

Tamil Mint

தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு….

VIGNESH PERUMAL

ரூபாய் 10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை: துணிகர சம்பவம்

Tamil Mint

மது அருந்துபவர்களை கெட்டவர்கள் என்று கூற முடியாது – ப.சிதம்பரம்

Shanmugapriya

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ‘டெஸ்ட்’ கிடையாது – அரசு ஆலோசனை

Tamil Mint

தேசிய சித்தா தினம் இன்று கொண்டாடப்படுகிறது

Tamil Mint

அதிகரிக்கும் ஆன்லைன் மருந்து விற்பனை! – ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

Shanmugapriya

முடிவுக்கு வந்த 2 மாத பஞ்சாயத்து…! ஒருவழியாக பதவியேற்ற புதுச்சேரி அமைச்சரவை…!

sathya suganthi

‘ரத்த நிலவு’ – இன்று நிகழும் வானியல் அதிசயம்…!

Lekha Shree