நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகமே உற்று நோக்குகிறது


கொரோனா தொற்றுக்கு மத்தியில் உலகில் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக அமெரிக்க அதிபர் தேர்தல் 3-ஆம் தேதி நடக்கிறது. அந்நாட்டு தேர்தலில் முக்கிய பிரச்சினையாக பார்க்கப்பட்ட பிற பிரச்சினைகளையெல்லாம் கொரோனா ஒதுக்கி வைத்துவிட்டது என்று சொல்லும் அளவிற்கு தேர்தலை கொரோனா ஜுரம் தொற்றிக்கொண்டுள்ளது.

 பிரசாரம் தொடங்கியதும் சீனாவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்த டிரம்ப், முகக்கவசம் அணியாமல், இயல்பாகவே காணப்பட்டார்.

Also Read  ஒரே ஒரு டுவீட்டுதான்…! பிட் காயின் மொத்த மவுசும் காலி…!

விரைவில் தொற்று கட்டுக்குள் வந்துவிடும், இந்த மாத்திரையை எடுத்தால் போதும் என்று மிகவும் கூலாகவே இருந்தார். எதிர்தரப்பான ஜனநாயக கட்சி, அமெரிக்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தாத டிரம்ப், தொற்று பரவலை ஊக்குவிக்கிறார் என விமர்சனம் செய்தது. ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டது. ஆனால், டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சியின் பிரச்சார கூட்டங்களில் இவையனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டது.  கடும் விமர்சனங்கள், எச்சரிக்கைகள் என எதுக்கும் செவிமடுக்காத டிரம்பையும் கொரோனா தொற்றிக்கொண்டது. ஆனாலும்,  தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்த டிரம்ப், சிகிச்சையில் இருக்கும்போதே காரில் முகக்கவசம் அணியாமல் ஹாயாக வெளியே வந்து தொண்டர்களுக்கு கை அசைத்தார்.  இதனையடுத்து, ஜோபிடன் அவருடனான நேரடி விவாதத்தையும் ரத்து செய்துவிட்டார். ஆனாலும், டொனால்டு டிரம்ப் சலிக்கவில்லை. அமெரிக்காவில் கொரோனா மூன்றாவது அலையை நோக்கும் நிலையிலும் முழு முடக்கம் எல்லாம் கொண்டுவர மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால், டிரம்ப் கொரோனாவை பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஜோபிடன் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா விவகாரம் தொடர்பான மோதல், அமெரிக்க தேர்தலில் முடிவில்லாமல் செல்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுற்றுலா பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும்! – மால்டா அரசு அதிரடி அறிவிப்பு!

Lekha Shree

Work From Home ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த Google.. என்னாச்சு?

suma lekha

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும்: பிரான்ஸ் கோரிக்கை

Tamil Mint

’என்னை கொன்றாலும் பரவாயில்லை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற மாட்டேன்’ – அடம்பிடிக்கும் இந்து அர்ச்சகர்..!

suma lekha

தேர்தல் நாளான்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்…! கொரோனாவால் நேர்ந்த துயரம்…!

Devaraj

விண்ணில் பிரத்யேக ஆய்வு மையம் அமைக்கும் சீனா…!

Lekha Shree

வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை ரத்து செய்த டொனால்ட் டிரம்ப்

Tamil Mint

“தாலிபான்கள் பின்னணியில் பாகிஸ்தான்!” – ஆப்கானில் இருந்து தப்பிய பாப் பாடகி பரபரப்பு குற்றச்சாட்டு..!

Lekha Shree

அமேசானின் முன்னாள் தலைவர் Jeff Bezos இன்று விண்வெளி பயணம்…!

Lekha Shree

மாபெரும் சிலந்தி வலை – மிரண்டு போன மக்கள்…!

Lekha Shree

கொரோனா பாதிப்புக்கு இடையே வரலாறு காணாத லாபம் ஈட்டிய லாம்போர்கினி கார் நிறுவனம்…!

Devaraj

வானில் பாரசூட் திறக்க முடியாமல் தவித்த நபர்… உதவிய கைகள்! வைரல் வீடியோ!

Devaraj