அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வாக்குகள் இன்று நடக்கின்றது


[rt_reading_time label=”” postfix=”minutes read” postfix_singular=”minute read”]

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி, ஏற்கனவே 9.2 கோடி பேர் ஓட்டு போட்டுள்ள நிலையில், அடுத்த அதிபராக மகுடம் சூடுவதில் டொனால்ட் டிரம்ப் – ஜோ பிடென் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்று வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளை அறிவிக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகின் அதிகாரமிக்க பதவியான அமெரிக்காவின் அதிபராக அடுத்து யார் பதவி வகிக்கப் போகிறார் என்பதை அனைத்து நாடுகளுமே ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளன. 

Also Read  காதலி செய்த விபரீத செயல் காதலனின் வீட்டை சூறையாடிய பெற்றோர்....

மொத்தம் 28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடந்தாலும் முன்னெப்போதையும் விட அமெரிக்கர்கள் இம்முறை வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் தொடங்கிய முன்கூட்டிய வாக்குப்பதிவு செய்யும் வசதியை பயன்படுத்தி இதுவரை 9.2 கோடி மக்கள்  தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். அதிபர் டிரம்ப் புளோரிடாவில் சொந்த ஊரில் தனது வாக்கை செலுத்தி விட்டார். தபால் ஓட்டு மூலமாகவும் மக்கள் தங்களை வாக்கை செலுத்தி உள்ளனர். கிட்டத்தட்ட 15 கோடி அல்லது 16 கோடி வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நேரடி வாக்குப்பதிவில் சுமார் 5 அல்லது 6 கோடி பேர் வாக்களிக்க வாய்ப்புள்ளது.

இறுதிகட்ட கருத்துக்கணிப்புகள் பிடெனுக்கு ஆதரவாகவே உள்ளன. ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் பிடெனுக்கு 51 சதவீதமும், டிரம்ப்புக்கு 42 சதவீதமும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் கருத்துக்கணிப்பில் விஸ்கான்சின், பென்சில்வேனியா, புளோரிடா, அரிசோனா ஆகிய 4 முக்கிய மாகாணங்களில் பிடெனுக்கு அமோக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பிடெனுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசம் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 

Also Read  மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் கொரோனா விதிகளைப் பின்பற்றுங்கள்: முதல்வர் வோண்டுகோள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ அதிக கட்டணம் வசூலிக்க கூடாது..” தமிழக அரசு எச்சரிக்கை..

Ramya Tamil

டோனி சாப்பிட்ட ஹாலில் இராணுவ ஆஸ்பத்திரியா நெட்டிசன் விமர்சனத்தில் சிக்கிய மோடி..

Tamil Mint

சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

VIGNESH PERUMAL

விஜய் சேதுபதியின் 46 வது படத்தில் அவருக்கு ஜோடி மிஸ் இந்தியாவாம்……

VIGNESH PERUMAL

இப்படியும் ஒரு போலீஸ் ஆ…அதிரடியான கைது… காரணம் இதுதானா….?

VIGNESH PERUMAL

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட காதல் தம்பதிக்கு சர்ப்ரைஸ்… தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்…!

malar

ஸ்லிம்மான குஷ்பு: கலாய்த்த பிரேம்ஜி: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

mani maran

சினிமா பாணியில் கணவனைக் கொன்ற மனைவி… வியூகம் வகுத்தது யார்…?

VIGNESH PERUMAL

“ஊரடங்கு வேண்டாம் என்றால் ஒத்துழைப்பு கொடுங்கள்” – மக்களிடம் வலியுறுத்திய கர்நாடக முதல்வர்!

Shanmugapriya

2015 ஆண்டிலேயே கொரோனா குறித்து எச்சரித்த பில் கேட்ஸ்

Tamil Mint

சினிமா பாணியில் “ஷாக்” கொடுத்த காதலி…. அதிர்ந்து போன மாப்பிள்ளை வீட்டார்….

VIGNESH PERUMAL

நள்ளிரவில் வங்கியின் ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி

VIGNESH PERUMAL