அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!


அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியரான மாத்யூ,  டிசம்பர் 18ஆம் தேதி பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்டதும், மற்றவர்களைப் போல அவரும் சமூக ஊடகம் ஒன்றில் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து தகவலை புகைப்படத்தோடு வெளியிட்டு இருந்தார். 

Also Read  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும்: பிரான்ஸ் கோரிக்கை

ஆனால், டிசம்பர் 24ஆம் தேதி மாலை அவருக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 26ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற மாத்யூவுக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. 

இது குறித்து சான் டியாகோ  தொற்று நோயியல் நிபுணரான டாக்டர் கிறிஸ்டியன் ராமர்ஸ், “மாத்யூவுக்கு  தடுப்பூசி போடுவதற்கு முன்பே அவருக்கு கொரோனா தொற்றியிருக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் “தடுப்பூசி போட்டுக்கொண்டபின் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் உருவாக 10 முதல் 14 நாட்கள் வரை ஆகும். ஆகவே பாதுகாப்பாக இருத்தல் நலம்” என்று கனடா மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

Also Read  உலகளவில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 17.22 லட்சத்தை தாண்டியது!

எனவே, தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், வழக்கம் போலவே,  கைகளை கழுவுதலும், மாஸ்க் அணிதலும், சமூக இடைவெளியும் பின்பற்றப்படுதல் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசியலுக்கு வர விரும்பும் பிரபல நடிகர்… எந்த கட்சியில் சேர ஆசைப்படுகிறார் தெரியுமா?

Lekha Shree

28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்!

Shanmugapriya

விண்வெளியில் மிதந்த ஜெஃப் பெசோஸ்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

பிரபல நடிகர் திடீர் மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி

Tamil Mint

விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்! எங்கு தெரியுமா?

Lekha Shree

இறந்து போன காதலன் மூலம் கர்ப்பமான காதலி…!

sathya suganthi

ஒரு மில்லியன் கொசுக்கள் உங்களை கடித்தால் என்னவாகும் தெரியுமா.? | கற்பனைகளின் கதை – 02

mani maran

ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண் கைது!

suma lekha

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்…!

Devaraj

புர்கா அணிய தடை…! இஸ்லாமிய பள்ளிகளை மூடல்…! இலங்கை அரசு நடவடிக்கை

Devaraj

“சிகிச்சையை நிறுத்திவைத்திருந்த நேரத்தில் கரம் கோர்த்தோம்” – கொரோனா வார்டில் நடந்த திருமணம்!

Tamil Mint

10 மாதங்களில் 43 முறை கொரோனா தொற்றுக்கு உள்ளான முதியவர்!

Shanmugapriya