‘ட்ரீ 40’ – ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்…! சாத்தியமானது எப்படி?


சாம் வான் அகேன் என்ற அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள் காய்ப்பதை அவரது அயராத முயற்சியால் சாத்தியப்படுத்தி இருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சாம் அமெரிக்காவின் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது பண்ணை தோட்டத்தில் விதவிதமான மரங்கள் மற்றும் தாவரங்களை வளர்த்து வருகிறார்.

அதில் ஒரு மரத்தில் 40 வகையான பழங்கள் காய்க்கிறது. அந்த மரத்துக்கு ட்ரீ 40 என்று அவர் பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து சாம் கூறுகையில், “சிறுவயது முதல் விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் விவசாய மற்றும் தோட்டக்கலை சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தேன்.

Also Read  அமெரிக்காவில் அச்சுறுத்தலாக மாறிய 'டெல்டா' வகை கொரோனா…! கவலையில் வெள்ளை மாளிகை…!

படித்து முடித்த பிறகு புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி வந்தேன். அப்போதே ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை வளர வைக்க முடியும் என திடமான நம்பிக்கை வைத்திருந்தேன்.

சுமார் 7 ஆண்டுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டேன். அப்போது வெவ்வேறு விதமான மரங்கள் மற்றும் தண்டுகளை படிப்படியாக ஒரே மரத்தில் இணைத்து அறிவியலின் துணைகொண்டு சில மாற்றங்களை செய்து வளர்த்தேன்.

Also Read  ஜெர்மனி: முடிவுக்கு வரும் 16 ஆண்டுகால ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி…!

தற்போது அம்மரத்தில் செரிஸ், பீச்சஸ், பிளம்ஸ் என 40 வகையான பழங்கள் காய்த்து உள்ளன. முதலில் சில தடைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. ஆனால், எனது தீவிர முயற்சிகளில் இது சாத்தியாயமானது.

ஒரு குழந்தையை கவனித்துக் கொள்வது போல் மரத்தை பராமரித்தேன். இன்று என்னுடைய முயற்சிக்கு பலன் கிடைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

Also Read  வரப்போகும் இந்த ஸ்மார்ட்போன் பற்றி தெரியுமா உங்களுக்கு....?

மழைக்காலங்களில் இந்த மரத்தை பார்ப்பவர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். வானவில்லை விட அதிக கலர்கள் இந்த மரத்தில் காண முடியும்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் 13 பயணிகளுடன் மாயமான ரஷ்ய விமானம்…!

Lekha Shree

சீனாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்கள்: மக்கள் அவதி.!

suma lekha

அமெரிக்க தேர்தல் முடிவுகள் தற்போதைய நிலவரம்

Tamil Mint

வாட்ஸ் அப்பின் 3 புதிய அப்டேட்ஸ்… என்னென்ன தெரியுமா?

Lekha Shree

இந்திய அணியை தட்டி தூக்கினா பரிசு மழை: உற்சாகத்தில் பாக். அணி வீரர்கள்.!

mani maran

இதற்கெல்லாம் கூட ரோபோ பயன்படுமா…! அசத்தும் சிங்கப்பூர்…!

Devaraj

கொரோனா பாதிப்புக்கு இடையே வரலாறு காணாத லாபம் ஈட்டிய லாம்போர்கினி கார் நிறுவனம்…!

Devaraj

அமெரிக்காவில் 2-ம் உலகப் போர் பலி எண்ணிக்கையை கடந்தது கொரோனா உயிரிழப்பு

Jaya Thilagan

‘ஒரு வெற்றி பல சாதனை’… 18 வயதில் அமெரிக்க கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை எம்மா…!

Lekha Shree

தொடர் ஏவுகணை தாக்குதல்.. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூளும் அபாயம்…

Ramya Tamil

இங்கிலாந்தில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் – இந்தியாவுக்கு நாடு கடத்தல்

Devaraj

தடுப்பூசி செலுத்திக்கொண்டு இளம்பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்…!

Lekha Shree