a

லட்சத்தீவு பிரச்சனை – அமித்ஷா திட்டவட்ட முடிவு


யூனியன் பிரதேசமான லட்சத் தீவில், மோடி அரசால் நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகி பிரபுல் படேல், மாட்டிறைச்சிக்கு தடை, மதுக் கடை திறப்பு உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், லட்சத்தீவில் நிலம் கையகப்படுத்துவது, சட்டவிரோதிகள் என்று கூறி கைது செய்வோரை ஓராண்டு வரை சட்டப் பாதுகாப்பின்றி சிறை வைப்பது போன்றவற்றிற்கு வழி வகுக்கும் 2 வரைவு சட்டங்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Also Read  லட்சத்தீவு விவகாரம் - நடிகை மீது தேசத்துரோக வழக்கு!

இந்த பிரச்சனை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, லட்சத்தீவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. முகமது பைசல் சந்தித்து பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முகமது பைசல், தற்போது பரிசீலனையில் உள்ள வரைவு சட்டங்கள் குறித்து, லட்சத்தீவில் மாவட்ட பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அதன் பின்பே சட்ட அமலாக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Also Read  "லட்சத்தீவை காப்பாற்றுங்கள்" என எழுப்பப்படும் குரல்கள் - பின்ணணி என்ன?

சிறப்பு அதிகாரி பிரபுல் பைசலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அமித் ஷாவிடம் தெரிவித்ததாக முகமது பைசல் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே லட்சத்தீவில் சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்த நிர்வாக அதிகாரியை மாற்ற வேண்டும் என கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Also Read  கல்லூரி தேர்வுகளுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்

லட்சத்திவு மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை அழித்து, காவி கொள்கையை அமல்படுத்தவும், பெரு நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கவுமே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மின் கட்டணம் செலுத்த இரண்டு மாதத்திற்கு விலக்கு வேண்டும் – சீமான்

Shanmugapriya

தமிழகத்தில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்: பிரேமலதா

Tamil Mint

ஆமை நடனமாடி பார்த்திருக்கிறீர்களா?- இணையத்தில் வைரலாகும் புதிய வீடியோ!

Shanmugapriya

எடப்பாடியில் டெபாசிட் வாங்க மாட்டார் இ.பி.எஸ் – ஸ்டாலின்!

Devaraj

யோகியை ஒதுக்கி வைத்த மோடி, அமித்ஷா…! பதிலடி கொடுத்த உ.பி. பாஜக…!

sathya suganthi

புளூ டிக்கிற்காக சண்டையிடும் பாஜக அரசு – ராகுல் காந்தி கலாய்…!

sathya suganthi

நாங்கள் மிட்டாய் கொடுக்கிறோம் என்றால் நீங்கள் என்ன அல்வா கொடுக்கிறீர்களா? – ஸ்டாலின் காட்டம்!

Lekha Shree

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…!

Lekha Shree

கொரோனா 2ம் அலை – குப்பை வண்டிகளில் சடலங்கள் ஏற்றி செல்லப்படும் அவலம்…!

Lekha Shree

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

குடலில் துளைகள் ஏற்படுத்தும் வெள்ளை பூஞ்சை..!

Lekha Shree

பாஜக ஆளும் மாநிலங்களில் செய்தியாளர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு! வெளியான ஆய்வால் அதிர்ச்சி!

Tamil Mint