a

21 தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆப்பு வைத்த அ.ம.மு.க…!


சட்டமன்றத் தேர்தல் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளது. அதிலும் அதிமுக 65 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

இந்த நிலையில், குறிப்பாக 21 தொகுதிகளில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்று புதிதாக உதயமான அமமுக பறித்துள்ளது தெரியவந்துள்ளது.

Also Read  "எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவது உறுதி" - அண்ணாமலை திட்டவட்டம்!

காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடியிடம் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவை 21,589 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ஆனால், அந்தத் தொகுதியில் அ.ம.மு.க. 44,864 வாக்குகளை பெற்றுள்ளது. இந்த வாக்குகள் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு கிடைத்திருந்தால், எச்.ராஜா வெற்றி பெற்றிருப்பார்.

இதேபோல், திருவாடானை, ஆண்டிப்பட்டி, பாபநாசம், தியாகராயநகர், சாத்தூர், தென்காசி, உத்திரமேரூர், ராஜபாளையம், காட்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், நாங்குநேரி, மயிலாடுதுறை, திருமயம், கந்தர்வக்கோட்டை, மன்னார்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், திருப்போரூர், தாராபுரம் ஆகிய 20 தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை அ.ம.மு.க. பெற்றுள்ளது.

Also Read  பாஜக வேட்பாளர் பட்டியல் இதோ...!

இந்தத் தொகுதிகளில் அ.ம.மு.க. பெற்ற வாக்குகளைவிட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தைவிட குறைவு ஆகும். அதாவது, இந்தத் தொகுதிகளில் அ.ம.மு.க. வாங்கிய ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருந்தால், மேலும் 21 தொகுதிகளை கைப்பற்றியிருக்க முடியும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நாளை நான் சென்னையில் இருப்பேன்” – தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி!

Tamil Mint

“தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும்” – டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

Shanmugapriya

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

Tamil Mint

நாளை முதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்

Tamil Mint

பாமாயில் விலை குறையப் போகிறதா?

Tamil Mint

பிப் 17 முதல் விருப்ப மனுக்களை பெறுகிறது திமுக

Tamil Mint

நேர்மையை ஆயுதமாக நாங்கள் கையில் எடுத்தால் எதிரில் நின்று பேச யாரும் இருக்கமாட்டார்கள்: கமல்ஹாசன்

Tamil Mint

வருமானமில்ல இன்சூரன்ஸ் கட்டமுடியல, கும்புடுறேன் ஆட்டோவுக்கு FC குடுங்கய்யா என்ற தாண்டமுத்துவின் வலி RTOக்கு புரியவே இல்லை.

Tamil Mint

சொந்த மருத்துவ உபகரணங்கள் கொண்டு சிறுமியின் துண்டான விரலை ஒட்டவைத்த மருத்துவர்!

Tamil Mint

சென்னையில் ஐந்து பேருக்கு மேல் கூட தடை

Tamil Mint

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Tamil Mint

தி.மு.க., வுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்

Tamil Mint