Jeff Bezos உடன் விண்வெளிக்கு செல்லும் 18 வயது இளைஞர்…!


மனிதர்களுடன் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ள விண்கலத்தில் அமேசான் தலைமை செயல் அதிகாரி Jeff Bezos உடன் Olive Daemen என்ற 18 வயது இளைஞர் ஒருவரும் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அமேசான் என்ற ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனத்தை துவக்கி, வெற்றிகரமாக நடத்தி, உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் ஜெப் பெசோஸ்.

சிறுவயதில் இருந்து விண்வெளி பயணம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 2000 ஆம் ஆண்டு “ப்ளு ஆர்ஜின்” என விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் துவக்கினார்.

2015ம் ஆண்டு ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்வெளிக்கு செலுத்தியது.

Also Read  ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் ‘நாயகன்’ பெர்னார்ட் சாண்டர்ஸ்..! நெட்டிசன்களை கவர்ந்த புகைப்படம்!

இந்த நிலையில், ஜூலை 20 ஆம் தேதி புளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட் மூலம், விண்வெளிக்கு பறக்க திட்டமிட்டுள்ளதாக ஜெப் பெசோஸ் தெரிவித்தார்.

இது தொடர்பான ஜெப் பெசோஸின் பதிவில், ப்ளு ஆர்ஜின் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு சோதனைக்காக மனிதர்களை ராக்கெட்டில் அனுப்ப திட்டமிட்டுள்ளது என்றும் அதன்படி, ஜூலை 20 ஆம் தேதி தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பறக்க உள்ளேன் என்றும் தெரிவித்தார்.

Also Read  லேசான கொரோனா பாதிப்பு இருந்தா நல்லதுதான் - அமெரிக்க ஆய்வில் தகவல்

தங்களுடன் மேலும் ஒருவர் பயணிக்கலாம் என்றும் அந்த இருகைக்கான ஏலம் துவங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சுமார் 28 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒரு இடத்தை அமேசான் நிறுவனம் ஆன்லைனில் ஏலம்விட்டது.

இதில் முதல் பயணத்துக்கு 18 வயது வாடிக்கையாளரை தேர்வு செய்திருப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

அவரிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

Also Read  2400 மைல்கள் மிதந்து வந்த கடிதம்… என்ன எழுதியிருந்தது தெரியுமா?

மேலும், வரும் 20ஆம் தேதி இந்த விண்கலம் ராக்கெட் மூலம் அமெரிக்காவின் டெக்சாஸ் மேற்குப் பாலைவனப்பகுதியில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டாம்” – அறிவித்த நாடு எது தெரியுமா?

Shanmugapriya

அமெரிக்க-மெக்சிகோ தடுப்புச்சுவரில் தூக்கி வீசப்பட்ட 2 குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

Devaraj

சிலி: முகக்கவசம் அணியாமல் புகைப்படம் எடுத்ததால் அதிபருக்கு 3,500 அமெரிக்க டாலர் அபராதம்!

Tamil Mint

வாட்சப்பில் புது வசதி

Tamil Mint

ஒன்றரை ஆண்டுகள் கழித்து தாயைப் பார்த்த மகள்! – கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திக்கொண்ட நெகிழ்ச்சி வீடியோ!

Tamil Mint

ஐந்தே நிமிடங்களில் கொரோனா தொடரை கண்டறியும் புதிய முறை

Tamil Mint

பிரபல நடிகர் திடீர் மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி

Tamil Mint

தொடரும் எகிப்து மம்மிகளின் சாபம்…! அலட்சியப்படுத்துகிறதா அரசு…!

Devaraj

2 சகோதரிகளின் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசார்…!

Devaraj

உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில் மாற்றம்

Tamil Mint

2019 ஆம் ஆண்டில் உலகளவில் நடந்த 20 பயங்கரவாத தாக்குதல்களில், குறைந்தது ஆறு தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் பதிவாகியுள்ளன

Tamil Mint

கிரண் பேடிக்கு எதிராக களமிறங்கியுள்ள முதல்வர் மற்றும் பலர்

Tamil Mint