படைப்புச் சுதந்திரம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும்தானா? விஜய்சேதுபதிக்கு இல்லையா?..பாரதிராஜாவிற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!


ஜெய்பீம் படம் தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,வானளாவிய படைப்புச் சுதந்திரம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும்தானா? இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முனைந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்தப் படைப்பு சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்? என்று இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பலரும் இந்த படத்தை பாராட்டியுள்ளனர்.

இருளர் இன மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தவறான காவல் அதிகரியாக வரும் நடிகரின் வீட்டில் வன்னியர்களின் அடையாளமாக அக்னி குண்டம் பதித்த காலண்டர் உள்ளது என்றும், மேலும் அந்த காவல் அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என்பது வன்னியர் சங்கத்தின் தலைவர் ஜெ குருவை நினைவூட்டுகிறது என்றும் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் 9 கேள்விகளுடன் கடிதம் ஒன்றை நடிகர் சூர்யாவிற்கு அனுப்பினார்.

இதனையடுத்து படத்தில் அக்னி குண்டம் காலண்டர் மாற்றபட்டதை தொடர்ந்து அன்புமணியின் கடிதத்திற்கு நடிகர் சூர்யா பதில் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனாலும் அந்த காவல் அதிகாரியின் பெயர் மாற்றப்படாதது குறித்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் சூர்யாவிற்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர். மேலும் இது தொடர்பாக சூர்யா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 5 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Also Read  சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கம்?

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த வாரம் இயக்குநர் பாரதிராஜா நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து அன்புமணிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்தில், ”படைப்பாளிகளுக்கு சுதந்திரம் தேவை. உங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாம். சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளன. ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் தூக்கியது ஏன் எனப் புரியவில்லை” என பாரதிராஜா கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாரதிராஜாவின் கடிதத்திற்கு அன்புமணி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “ ஒடுக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை சாதி பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனையும் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. வன்னியர் சமூகம் திட்டமிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது தொடர்பான சமூகப் பிரச்சனை இது. இந்த பிரச்சனையில் உங்களுக்கும் திரைத்துறையினருக்கும் மிகப் பெரிய புரிதல் இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது

Also Read  100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் - அமைச்சர் சேகர் பாபு அதிரடி

வானளாவிய படைப்புச் சுதந்திரம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும்தானா? இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முனைந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்தப் படைப்பு சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்? கடுமையான கண்டனக் கடிதத்தை தாங்கள்தான் எழுதியிருந்தீர்கள், நினைவு இருக்கிறதா? சமீபத்தில் வெளியான Family Man- II தொடர் முழுவதும் தடை (Ban) செய்ய வேண்டுமென்று கடுமையான எச்சரிக்கை விடுத்தீர்கள். அப்பொழுது எங்கே போயிற்று உங்கள் படைப்பு சுதந்திரம்? அண்மையில் வெளியான கர்ணன் படத்தில் 1997-ஆம் ஆண்டு என்று இருந்ததை மாற்றி ’1990-களின் இறுதியில்” என்று போட வைத்தபோது, என்னவாயிற்று உங்கள் படைப்பு சுதந்திரம்.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவு படுத்தும் வகையில் வன்னியர்களுக்கு புனிதமான அக்னி குண்டத்தை வைத்து சத்ரியர் என்ற அடிக்குறிப்பு போட்டு கொலையாளிகளாகக் காண்பித்தால் அதற்கு நீங்களும், திரைத்துறையினரும் ஆதரவு அளிக்கிறீர்களா?

Also Read  "சம்பாதிப்பது கோடி… கொடுப்பது லட்சம்.." - நடிகர் சூர்யாவை விமர்சித்த காயத்ரி ரகுராம்..!

ஜெய்பீம் திரைப்படத்தில் சாதி வெறி பிடித்த கொடுமைக்கார சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட தேவர் திருமகனாரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை அவர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா?

அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்து இருப்பீர்களா?” என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தற்போது அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. முந்தைய தொடர் வெற்றி போல இப்போதும் தொடர் வெற்றி பெறும்

Tamil Mint

‘முதல்வரின் முகவரி’ : புதிய துறை உருவாக்கம்

Lekha Shree

ஸ்டாலினுக்கு ஒன்றுமே தெரியவில்லை…. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…..

Lekha Shree

“ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது” – சி.வி.சண்முகம்

Lekha Shree

மின் கட்டணம் செலுத்த இரண்டு மாதத்திற்கு விலக்கு வேண்டும் – சீமான்

Shanmugapriya

“முக்குலத்தோர் புலிப்படை தேர்தலில் போட்டியிடவில்லை” – கருணாஸ்

Shanmugapriya

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

‘தமிழர்கள்’ முதல் ‘இந்துக்கள்’ வரை: திமுக தேர்தல் அறிக்கையில் கோயில்கள்…! பா.ஜ.க.வுக்குக் கிடைத்த பாதி வெற்றியா?

Devaraj

2 கட்டங்களாக நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் – அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

Lekha Shree

அதிமுக கூட்டத்தில் பரபரப்பு..! முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்த சி.வி.சண்முகம்..!

Lekha Shree

பெட்ரோல் டீசல் விலை எப்போது குறையும் ? – சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

sathya suganthi

முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு தமிழக தலைவர்கள் இரங்கல்..!

suma lekha