a

கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்து – ஆந்திர மாநில அரசு ஒப்புதல்!


கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நெல்லூர் அருகே கிருஷ்ணபட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் தயாரித்து வழங்கும் ஆயுர்வேத மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பக்க விளைவுகள் இல்லை என நிரூபணமானதால் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து தர ஆந்திர அரசு ஒப்புதல் தந்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ஆயுர்வேத பயிற்சியாளர் போனிஜ் ஆனந்தையா விநியோகித்த மருந்தை ஆந்திர மாநில அரசு பாதுகாப்பானதாக அறிவித்தது.

Also Read  ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

ஆந்திரா ஆயுஷ் கமிஷனர் ராமுலு நாயக் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆனந்தையா விநியோகித்த மருந்தில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் இல்லை என்று அந்த துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது” என தெரிவித்தார்.

மேலும், “அந்த மருந்து 18 மூலிகைகள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ குணங்களுடன் பாதுகாப்பானவை” என்று அவர் கூறினார்.

Also Read  திருப்பதி தேவஸ்தானத்தின் பலே யோசனை - துளசி விதை பையில் லட்டு பிரசாதம்!

“இதுவரை, 80,000 பேர் இந்த மருந்தை உட்கொண்டுள்ளனர். அவர்களில் சிலரிடம் நாங்கள் பேசினோம், யாரிடமிருந்தும் புகார்கள் எதுவும் வரவில்லை” எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த மருந்தினை வாங்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read  டிசம்பர் 14 ஆம் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பரிசுத் தொகையில் பாதியை சிறுவனின் கல்விக்கே வழக்கிய மயூர் ஷெல்கே!

Lekha Shree

சரக்கு லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு – மத்திய அரசுக்கு 14 நாட்கள் நோட்டீஸ்

Tamil Mint

நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Tamil Mint

கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த 2 ஆண்டுகள் வரை கூட அவகாசம் கொடுக்க இயலும் – மத்திய அரசு.

Tamil Mint

இன்று ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

Tamil Mint

இப்படியும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வா…! கேரள மக்களின் பல்ஸ் பார்த்து களமிறக்கிய வைரல் வீடியோ…!

Devaraj

இந்திய அளவில் முதலிடம் பிடித்த உத்தரபிரதேசம்! எதில் தெரியுமா?

Devaraj

சைக்கிளில் வந்த டெலிவரி பாய்க்கு பைக் வாங்கிக் கொடுத்த நபர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

ஏர் இந்தியா, டோமினோஸ், பிக் பாஸ்கட் மூலம் இமெயில் ஐடி திருட்டு – மத்திய அரசு எச்சரிக்கை

sathya suganthi

மம்தா பானர்ஜி அனுதாபம் தேடுகிறார்…! – தலிபான்களா தாக்கினார்கள் என பாஜக நக்கல்

Devaraj

காதலர் தின பரிசாக மனைவிக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முடிவு செய்த கணவர்!

Tamil Mint

ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி: 4106 பேர் பலி

sathya suganthi