காதல் மனைவியை சூட்கேசில் வைத்து எரித்து கொன்ற கொடூரன் – வெளியான சிசிடிவி காட்சிகள்!


ஆந்திராவில் காதல் மனைவியை கொன்று சூட்கேசில் எடுத்து சென்று தீ வைத்து கொளுத்திய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு பின்புறம் 5 நாள்களுக்கு முன்பு உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

அங்கு கிடைத்த தலைமுடியை வைத்து இறந்தது பெண் என கண்டறிந்த போலீசார், பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில், இறந்தது புவனேஷ்வரி என்பதும் அவரது கணவரே அந்தப்பெண்ணை கொலை செய்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வரி சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி உள்ளார். இவரது கணவர் ஸ்ரீகாந்த். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

Also Read  வாகனத்தில் கட்டிவைத்து நாயை வதைத்த கல்நெஞ்சக்காரர் கைது...!

இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடங்கள் ஆகிறது. ஸ்ரீகாந்த் தனது மனைவியை வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார்.

அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து காரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்.

மருத்துவமனை பகுதியில் வைத்து உடலை எரித்துவிட்டு சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகள் மூலம் ஸ்ரீகாந்தை மாட்டிக்கொண்டார் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

மனைவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கேட்டதற்கு புவனேஷ்வரிக்கு கொரோனா தொற்று இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறந்துவிடவே மருத்துவமனை நிர்வாகம் உடலை எரித்துவிட்டதாக கூறி உறவினர்களை நம்ப வைத்துள்ளார்.

Also Read  அச்சு அசல் நடிகை ரோஜாவை போல் உள்ள அவரது மகள்… வைரல் புகைப்படம் இதோ..!

ஆனால், போலீசார் விசாரணையில் ஸ்ரீகாந்த் ரெட்டிக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடும் சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து புவனேஸ்வரியின் தலையில் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

வீட்டில் சடலமாக கிடந்த புவனேஸ்வரியை என்ன செய்வது என்று யோசித்த ஸ்ரீகாந்த் கடைக்கு சென்று பெரிய அளவிலான சூட்கேஸ் ஒன்றை வாங்கி வந்துள்ளார்.

மனைவியின் கை கால்களை கட்டி சூட்கேசில் வைத்து குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு சூட்கேசை எடுத்து சென்றுள்ளார்.

Also Read  டிரைவிங் லைசன்ஸ் காலக்கெடு நீட்டிப்பு

அப்போது வழியில் பார்ப்பவர்களிடம் எல்லாம் ஊருக்கு செல்வதாகவும் அதனால் அதிக துணிகளை எடுத்துச் செல்வதாகவும் சாதாரணமாக பேசியுள்ளார்.

பின்னர் சூட்கேஸை காரில் ஏற்றிச் சென்றவர் திருப்பதி அரசு மருத்துவமனை அருகே சடலத்தை தீவைத்து கொளுத்தியுள்ளார்.

இதையடுத்து கொலை வழக்கில் ஸ்ரீகாந்தை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமூக சேவகராக தன்னை காட்டிக்கொண்ட அவர் மனைவியை அடித்துக் கொன்று தீ வைத்து கொளுத்திய சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா 3வது அலை பாதிப்பு எப்போது அதிகமாக இருக்கும்? விஞ்ஞானிகள் குழு தகவல்…!

sathya suganthi

“இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது” – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது…!

Lekha Shree

முதலாளியின் மனைவியை கொலை செய்த காம கொடூரன்!

Lekha Shree

கல்யாண சாப்பாட்டில் Maggi Noodles..! – வைரலாகும் வித்தியாசமான மெனு!

Tamil Mint

கணவர் வீரமரணம் – ராணுவத்தில் இணைந்த மனைவி!

Lekha Shree

‘கோவிஷீல்ட்’ தன்னார்வலரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

Tamil Mint

பியூச்சர் குழுமம் மற்றும் அமேசான் நிறுவனம் இடையே மோதல் !! டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை

Tamil Mint

இந்தியாவை கண்டு அச்சப்படும் உலக நாடுகள்…!

Devaraj

இரயில்வே துறை தனியார்மயமாகுமா….? அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளார்….

VIGNESH PERUMAL

கோவிஷீல்டு+கோவேக்சின் : உ.பி. அரசு மருத்துவமனையில் அரங்கேறிய குளறுபடி

sathya suganthi

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேல் அனுமதி – மத்திய உள்துறை அமைச்சகம்

Tamil Mint