“மாணவர் தனுஷின் இறப்பிற்கு திமுக தான் முழு பொறுப்பு!” – அண்ணாமலை குற்றச்சாட்டு


சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தனுஷ் இறந்ததற்கு திமுக தான் முழு பொறுப்பு என்றும் திமுக தலைவர் மீது டி.ஜி.பி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக தலையாவே அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் 2019ல் 1017 மாணவர்கள் தான் நீட் தேர்வு எழுதினர். ஆனால், 2020இல் 17,000 ஆக அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

Also Read  "ஏப்ரல் 6ம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு" - தொழிலாளர் ஆணையம்

அதேபோல் கடந்த 2019ல் 44 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2020ல் 57.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வுக்கு முன் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் அதிகம் சேர்ந்தனரா என தெளிவுபடுத்த வேண்டும்.

இது தொடர்பாக 2006 முதல் 2015 வரையிலான விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அந்த அறிக்கையில் திமுகவை சேர்ந்த எத்தனை பேர் மருத்துவக் கல்லூரி நடத்துகின்றனர்; அதில் எத்தனை மாணவர்களை நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டும்.

Also Read  நிவாரண பணிகளில் மிக வேகமாக சுழன்று பணியாற்றிய பல மூத்த அமைச்சர்கள் வைரஸ் பாதிப்பில் சிக்கியிருக்கிறார்களா? அதிர்ச்சியில் அதிமுக

சேலத்தில் மாணவர் தனுஷ் இறப்பிற்கு திமுக தான் முழு பொறுப்பு. எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என வாக்குறுதி அளித்த திமுக தலைவர்கள் மீது டிஜிபி வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி…!

sathya suganthi

கிருபானந்த வாரியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

suma lekha

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை

Tamil Mint

நலவாழ்வு முகாமுக்கு உற்சாகத்துடன் புறப்பட்ட கோவில் யானைகள்

Tamil Mint

ஸ்டாலின் திட்டம் தடைபடுமா…! திடீர் என வெளியேறும் புலிப்படை… தொகுதி குளறுபடிகள் தான் காரணமா…?

VIGNESH PERUMAL

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை மருத்துவமனையில் இருந்தே விடுதலை!

Tamil Mint

சூரியன், சந்திரன்: கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட அதிசய வெள்ளி நாணயம்

suma lekha

பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Lekha Shree

தமிழகத்தில் முழு ஊரடங்கு….!

Lekha Shree

அதிமுக VS திமுக யாருக்கு யார் போட்டி….?

VIGNESH PERUMAL

சந்தி சிரிக்கும் திமுகவின் சமூக நிதி… தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை நிற்கவைத்து நேர்காணல்…!

malar