தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் அண்ணாமலை – மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு..!


ஜூலை 16ஆம் தேதி தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை கோவையில் இருந்து இன்று சென்னை வருகிறார்.

எனவே, இன்றும் நாளையும் வழியெங்கும் உள்ள மாவட்டங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இன்று கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு பயணத்தை தொடங்கிய அண்ணாமலைக்கு வா.உ.சி மைதானம் அருகே பாஜகவினர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர்.

Also Read  வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கையுறை - சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

அதன்பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “பாஜக ஒரு தனிமனித காட்சி கிடையாது. தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வதாகும். நிச்சயமாக பாஜகவை வளர்க்கவும் வலுப்படுத்தவும் வேண்டும்.

பாஜக சார்பில் தமிழ்நாட்டில் இருந்து அதிக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் இருக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களின் இலக்கு.

Also Read  தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என புகார்

பாஜகவின் சித்தாந்தம் மற்றும் திட்டங்களை ஒவ்வொரு மக்களுக்கும் கொண்டு சேர்ப்போம். கட்சியில் பல சீனியர்கள் இருந்தாலும் அனைத்து தலைவர்களையும் அரவணைத்து செல்வேன்.

திமுகவை எதிர்க்க பாஜகவின் கொள்கைகளை எடுத்துச் சொன்னால் போதும். பாஜக சார்பில் சட்டமன்றத்தில் 4 உறுப்பினர்கள் இருந்தாலும் கூட திமுக பேசுகின்ற அனைத்து அரசியலும் எங்களை சார்ந்துதான் இருக்கிறது. அதை எதிர்க்கும் எங்களின் அரசியலையும் பார்ப்பீர்கள்” என தெரிவித்தார்.

Also Read  தமிழகத்தில் தளர்வுகள் அறிவிப்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்…! எவற்றிற்கு அனுமதி…! எவற்றிற்கு தடை…!

Devaraj

பட்டுப்புடவையில் நயன்தாரா, வேட்டி சட்டையில் காதலர் விக்னேஷ் சிவன்… ஃபாரீன் வரை எதிரொலித்த பாரம்பரியம்…!

Tamil Mint

நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பும் நடிகர் சூர்யா…!

Lekha Shree

கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழு – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சேர்ப்பு

sathya suganthi

திமுக பொதுக்குழு கூட்டம் தொடக்கம்

Tamil Mint

விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: தேமுதிக அறிக்கை

Tamil Mint

வன்முறையை தடுக்க முடியவில்லை – பதவியை ராஜினாமா செய்வதாக திரிணாமூல் காங். எம்.பி. அறிவிப்பு

Tamil Mint

தமிழகத்தில் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு!

Lekha Shree

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை செய்யப்பட்டது எதற்காக? பரபரப்பு பின்னணி

Tamil Mint

கோவை மாவட்டம் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் – வானதி ஸ்ரீனிவாசன்

Shanmugapriya

ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகிறார் சசிகலா; உறுதிப்படுத்திய ராஜா செந்தூர் பாண்டியன்

Tamil Mint

நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி – ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி கோர விபத்து…!

sathya suganthi