தமிழகம்: தொடரும் நீட் சோகம்..! மேலும் ஒரு மாணவி தற்கொலை..!


வேலூர் மாவட்டம் தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி சௌந்தர்யா நீட் தேர்வில் தேர்ச்சியடைவது குறித்த அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தில் சௌந்தர்யா என்னும் 17 வயது மாணவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் நீட் தேர்வில் மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் என்னும் விவசாயியின் மகன் தனுஷ் (19) நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனுஷ் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் கனவில் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், 2 முறையும் தேர்ச்சி பெறவில்லை.

Also Read  எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு எப்படி நடக்கும்…! சுவாரஸ்யமான தகவல்கள்…!

அதனால் 3வது முறையாக தேர்வு எழுத தயாராகி வந்தவர், தேர்வில் தோற்றால் என்னவாகும் என்ற அச்சத்தால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தனுஷின் தற்கொலை சம்பவம் கூழையூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு மசோதாவை தாக்கல் செய்தார்.

Also Read  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்நிலையில், நேற்று நீட் தேர்வை சரியாக எழுதவில்லையோ என அரியலூரை சேர்ந்த மாணவி கனிமொழி மன உளைச்சலில் இருந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டடுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து தற்போது வேலூர் மாவட்டம் தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி சௌந்தர்யா நீட் தேர்வில் தேர்ச்சியடைவது குறித்த அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  பாரம்பரிய கலைகளை அழித்து விடாதீர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

தமிழகத்தில் நிகழும் நீட் தற்கொலைகள் மக்களையும் பெற்றோர்களையும் கவலை அடைய செய்துள்ளது. இப்படி தினம் ஒரு மாணவர் அல்லது மாணவி உயிரிழக்கும் சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீட்தேர்வு விலக்கு மசோதா தற்போது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்த சட்டம் அமலுக்கு வரும்.

இதுவரை தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளுக்கான நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 10க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுகவின் மூத்த தலைவர் மறைந்தார்

Tamil Mint

மத்திய அரசுக்கு ரூ 31.50; தமிழகத்துக்கு வெறும் ரூ.1.40 – உண்மையை போட்டுடைத்த பிடிஆர்…!

sathya suganthi

பிரபல யானை ஆர்வலர் அஜய் தேசாய் மறைந்தார்

Tamil Mint

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா காலமானார்

sathya suganthi

அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா சட்ட போராட்டம் நடத்துவார் – டிடிவி தினகரன்

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 26.05.2021

sathya suganthi

உயர் மட்ட கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது

Tamil Mint

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது…!

Lekha Shree

நாளை முதல் தமிழகத்தில் சுங்கக் கட்டணங்கள் உயர்வு, மக்கள் அதிர்ச்சி

Tamil Mint

“அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது”- யு.ஜி.சி. திட்டவட்டம்.

Tamil Mint

தமிழகத்தில் ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்… 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருத்து!

Tamil Mint

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல்

Tamil Mint