நீட் தேர்வு முடிவால் மாணவர் தற்கொலை..!


நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சேலம் மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள வடகுமரை ஊராட்சியை சேர்ந்த கணேசனின் 20 வயது மகன் சுபாஷ்சந்திரபோஸ் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுதியுள்ளார்.

இவருக்கு தற்போது வெளியான தேர்ச்சி முடிவில் குறைந்த மதிப்பெண் கிடைத்துள்ளது.

இதனால் மனமுடைந்த மாணவர் சுபாஷ் கடந்த 2 ஆம் தேதி காலை களைக்கொல்லி பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

Also Read  பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு..! - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..!

அவரது பெற்றோர் அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சுபாஷ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், மாணவர் சுபாஷ்சந்திரபோஸ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

Also Read  "சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நாளை நிறைவேறும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

இச்சம்பவம் வடகுமரை ஊராட்சியில் சோகத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்து தகவலறிந்த தலைவாசல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நீட் தேர்வு முடிவுகள் வெளி வருவதற்கு முன்னரே தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சேலம் மாவட்டம் கூழையூரை சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி போன்ற சில மாணவ-மாணவிகள் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர்.

Also Read  நீட் தேர்வில் வென்ற பழங்குடியின மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்..!

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் நடந்த நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சீரியல் பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டிய நபர்… அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்!

suma lekha

ஏப்ரல் 9 முதல் லாக்டவுன்? என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்? முழு விவரம் இதோ!

Devaraj

“தமிழகத்தில் இன்று மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது” – தமிழக அரசு

Lekha Shree

கோயில்…மசூதி…சர்ச்…ஆல் டவுண்டிங்கில் சசிகலா…!

Devaraj

ஆக்சிஜன் தேவைக்கு 104-ஐ தொடர்பு கொள்ளலாம் – தமிழக அரசு

Lekha Shree

ஜெர்மனி இளம்பெண் அளித்த புகார்: நடிகர் ஆர்யா போலீசில் ஆஜர்.!

mani maran

சென்னையில் 36,000 வீடுகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம்..!

suma lekha

‘ஜெய் பீம்’ சர்ச்சை – சூர்யா ரசிகர் மன்ற பேனருக்கு தீ வைத்த இளைஞர்கள்…!

Lekha Shree

வடிவேலு பட பாணியில் அனைத்து கட்சிக்கும் ஓட்டு போட்ட நபர்..!

Lekha Shree

பாலியல் புகார் – பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் கைது!

Lekha Shree

முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது… கொரோனா குறித்து விவாதிக்கப்படும் என தகவல்

Ramya Tamil

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினரின் “உதயசூரியன்” கடிகாரம்…!

Lekha Shree