’கனவு நாயகன்’ அப்துல்கலாமின் 90 வது பிறந்தநாள் இன்று..!


’உறக்கத்தில் வருவதன்று கனவு;நம்மை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு’ என்று கூறி கனவுக்கே இளைஞர்கள் மத்தியில் தனி இலக்கணம் வகுத்து கொட்டுத்த ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 90 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.

1931-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15-ம் நாள் ராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். அப்துல் கலாம், ராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். 1954-ம் ஆண்டு, இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்தவர், விண்வெளி பொறியியல் பட்டத்தை சென்னை எம்.ஐ.டி-யில் பெற்றார்.

Also Read  ’என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம்’ - சசிகலா வேண்டுகோள்!
A.P.J. Abdul Kalam: The karma yogi - Independence Day Special News - Issue  Date: Aug 30, 2021

1960 ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (DRDO) விஞ்ஞானியாக இணைந்தார் அப்துல் கலாம். ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்ததில் கலாமின் பங்கு முதன்மையானது. இதற்காக மத்திய அரசு கலாமுக்கு 1981 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது.

1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்து வந்தார். 1999 ஆம் ஆண்டில் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஐந்து ஏவுகணை திட்டங்களில் இன்றியமையாத பங்காற்றியுள்ளார். ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தபோதே மயக்கமடைந்து விழுந்து காலமானார் ஏவுகனை நாயகர் அப்துல் கலாம்.

Also Read  மெல்ல மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! - 39,000 பேருக்கு புதிதாக தொற்று..!

இந்நிலையில்,இன்று அவரின் 90 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு சமூகவலைதளங்களில் அவரைப்பற்றிய நினைவுகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் நரேந்திரா மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்

Tamil Mint

அடுத்தடுத்து பதவி விலகும் மத்திய அமைச்சர்கள்! – ஹர்ஷ்வர்தனும் ராஜினாமா!

Lekha Shree

திருப்பதி : டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்…!

sathya suganthi

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஆற்றில் குதித்த உ.பி. மக்கள்…!

sathya suganthi

இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? – சுப்ரமணியன் சுவாமி சாடல்

Tamil Mint

டெல்லி: கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர் நிலவுகிறது

Tamil Mint

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் சென்ற ராகுல்காந்தி நொய்டாவில் கைது.

Tamil Mint

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்படைப்புகள் நீக்கம்! – முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!

Lekha Shree

“புதிய ‘பிரைவசி’ பாலிசியை ஏற்க பயனர்களை கட்டாயப்படுத்த மாட்டோம்” – வாட்ஸ்அப் உறுதி!

Lekha Shree

தங்கம் விலை கிடுகிடு வீழ்ச்சி

Tamil Mint

அதிதீவிர புயலாக உருவெடுக்கும் ‘யாஸ்’…!

Lekha Shree

நாட்டை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 4,329 பேர் பலி…!

sathya suganthi