ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை – அப்பல்லோ நிர்வாகம் ஆஜராக திட்டவட்ட மறுப்பு..!


அப்பல்லோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராக திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அது சம்பந்தமாக விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்க அதிமுக அரசு உத்தரவிட்டது.

அண்மையில், 90% விசாரணை ஏற்கெனவே முடிந்து விட்டதாகவும்,100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு அப்பல்லோ நிர்வாகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பல்லோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராக திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Also Read  ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்!

இதுகுறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் அப்பலோ நிர்வாகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், “மருத்துவர்கள் குழு அடங்கிய வேறு விசாரணை ஆணையம் முன் ஆஜராக தயாராக உள்ளோம்.

ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் குழு உதவியில்லாமல் ஆணையம் கருத்து தெரிவிக்கக் கூடாது.

Also Read  காங்கிரஸை கண்டு கொள்ளாத திமுக… கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

அப்போதைய அதிமுக அரசு கூறியதால் தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன. ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளது.

விசாரணை விவரங்கள் திட்டமிட்டு ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்டுகின்றன. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஊடகங்களில் தொடர்ந்து தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

Also Read  பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தரம் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்த கருத்துக்களே போதுமானவை” என வாதிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆகஸ்ட் இறுதி வரை ஈ பாஸில் மாற்றம் இல்லை, இபிஎஸ் அதிரடி முடிவு

Tamil Mint

அரசு ஆஸ்பத்திரி டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்!

Tamil Mint

மீதமுள்ள ரூ.2,000 நிலுவைத் தொகை – கொரோனா நிவாரண நிதி இன்று முதல் விநியோகம்…!

sathya suganthi

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் நாளை ஆலோசனை..!

Lekha Shree

கொரோனாவால் உயிரிழந்த இந்து மதத்தை சேர்ந்தவருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய பெண்!

Shanmugapriya

தமிழகத்திலும் நுழைந்தது கருப்பு பூஞ்சை நோய் – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

sathya suganthi

“நிலக்கரி காணவில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு..!

Lekha Shree

தமிழகத்தில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பாதிப்பு…!

Devaraj

முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமானவரி சோதனை.!

suma lekha

கைலாசா மீது “பயோ வார்” – மர்ம விதைகள் அனுப்பப்பட்டுள்ளதாக நித்தி. பரபரப்பு குற்றச்சாட்டு

sathya suganthi

தமிழகம்: இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

Lekha Shree

மம்தா பானர்ஜிக்கு உயர்நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம்…! காரணம் இதுதான்…!

sathya suganthi