a

PSBB பள்ளியில் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்த மோசமான அனுபவங்கள்! சாதி ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா?


பி எஸ் பி பி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. 20 ஆண்டுகளாக அந்த பள்ளியில் காமர்ஸ் ஆசிரியர் ஆக பணியாற்றி வரும் இவர் மீது பள்ளியின் முன்னாள் மாணவிகள் பலரும் அடுக்கடுக்கான குற்றச்சாடுகளை வைத்து வருகின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டுகள் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் சாதி ரீதியிலான துன்புறுத்தல்களுமே இந்த பள்ளியில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பழைய பேட்டிகள் வைரலாகி வருகிறது.

பிபிசி சேனலின் நேர்காணல் ஒன்றில், அப்பா இறந்த பிறகு பள்ளியில் பீஸ் கட்டமுடியாத சூழல், அப்போது அந்த பள்ளி நிர்வாகம் கோடம்பாக்கம் சாலையில் சென்று பாட்டு பாடு உனக்கு காசு தருவார்கள் என கேலி செய்ததைப் பற்றி சொல்கிறார்.

அதாவது ரஹ்மானை பீஸ் கட்டமுடியவில்லை என்றால் பிச்சை எடு என்பது போல அவமானப்படுத்தியுள்ளனர்.

Also Read  டேராடூன் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா ரகசியமாக தப்பி ஓட்டம்…!

இது மட்டும் இல்லை, மற்றொரு தனியார் சேனலின் நிகழ்ச்சியில், நடிகை சுஹாசினி ஏ.ஆர்.ரஹ்மானை பேட்டி எடுக்கிறார்.

பி எஸ் பி பி பள்ளியின் அனுபவம் குறித்து கேட்ட போது, நான் பாதியிலேயே பள்ளியில் இருந்து வெளியேறி விட்டேன் என்று பதிலளிக்கிறார் ரஹ்மான்.

Also Read  பாலியல் புகார்…! பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…!

அதோடு நல்ல மற்றும் கெட்ட அனுபவங்கள் இரண்டுமே எனக்கு அந்த பள்ளியில் நடந்துள்ளது என்றும் வருத்தத்தோடு சொல்கிறார்.

ஆனால் சுஹாசினியோ சற்றும் பள்ளியில் என்ன நடந்தது என்பதை பற்றி கேட்காமல், வேறு கேள்விக்கு நழுவி விடுகிறார்.

மாணவர்களுடன் உங்கள் உணவை ஷேர் செய்து கொள்வீர்களா என்று சுஹாசினி கேட்க, அதற்கு ரஹ்மான் நான் நான் – வெஜ். எப்போதாவது தான் ஷேர் செய்து கொள்வார்கள் என்னுடன் என்று சொல்கிறார்.

அதாவது நான் – வெஜ் என்ற காரணத்தால் மட்டும் சாதி ரீதியிலான துன்புறுத்தல்களை சந்தித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Also Read  பாலியல் புகார் - தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்குப்பதிவு!

பள்ளியில் முழு படிப்பையும் முடிக்காமல் பாதியிலேயே டிராப் அவுட் ஆம ரஹ்மான் எந்த இடத்திலும் பி எஸ் பி பி பள்ளியின் புகழை பாடவில்லை.

மாறாக அந்த பள்ளி மீது மோசமான விமர்சனங்களையே முன் வைக்கிறார். ஒரு இடத்தில் இந்த பள்ளியில் படித்து தானே உங்களுக்கு இவ்வளவு ஆங்கில அறிவு கிடைத்துள்ளது, அதிலும் ஆஸ்கர் மேடையில் சென்று நீங்கள் பேச அதுதானே காரணம் என்று சுஹாசினி கேட்ட கேள்விக்கு சிரிப்புடன் பதில் சொல்லாமல் கடந்து விடுகிறார். பிராமணர்களுக்கு மட்டும் தான் அந்த பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பிற சாதி மாணவர்கள் அவ்வளவு எளிதாக பள்ளிக்கு சென்று வர முடியாது என்றும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் போல இன்னும் எத்தனை மாணவர்கள் அந்த பள்ளி மூலம் பாதிக்கப்பட்டார்களோ?


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண்கள் விவகாரம்: மோடியை சாடிய கனிமொழி எம்.பி.,!

Lekha Shree

மாநகராட்சிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை வரும் 10ம் தேதி முதல் திறக்கலாம்.

Tamil Mint

சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சரவணா ஸ்டோர்ஸ் ?

Tamil Mint

அதிமுக கூட்டணியில் பாமக? வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு?

Tamil Mint

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்கள் – மு.க.ஸ்டாலின்

sathya suganthi

முதலையை இழுக்கும் இளைஞர் – வைரல் ஆன வீடியோவால் சிக்கல்!

Tamil Mint

குரூப் 1 தேர்வு – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

Tamil Mint

தமிழகத்தில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

திமுக எம்பிக்கு கொரோனா !!

Tamil Mint

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

பிலவ ஆண்டில் 12 புயல்கள் உருவாகும்: பஞ்சாங்கத்தில் கணிப்பு

Devaraj

ரஜினி ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதி

Tamil Mint