யார் இந்த அர்ஜுன மூர்த்தி ? இவர் திமுகவினர் உடன் தொடர்புகள் கொண்டுள்ளாரா ?


ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினிகாந்த் நியமித்துள்ள அர்ஜுன மூர்த்தி குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. 

யார் இவர் ?

அர்ஜுன மூர்த்தி, பாஜகவில் அறிவுசார் பிரிவில் பொறுப்பில் இருந்தவர் மட்டும் அல்ல, சிறந்த தொழில்முனைவரும் ஆவார். வர்த்தகம், உற்பத்தி, பிராண்டிங், டெலிகாம் லைனில் தனக்கான இடத்தை பிடித்த நபர்.

அர்ஜுன மூர்த்தி மற்றும் அவரது மகள் லட்சுமிதீபா இணைந்து ‘Yeldi softcom’ எனும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

Also Read  தமிழகத்தை நெருங்கிய கறுப்பு பூஞ்சை நோய்…! ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் பாதிப்பு…!

இந்நிறுவனம் நியர் பீல்ட் கம்ப்யூனிகேஷன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தொடர்பில்லா முறையில் மொபைல் சாதனம் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் சேவையை அளித்து வருகிறது.இந்நிறுவனம் வழங்கும் புதுமையான பண பரிவர்த்தனை சேவையை பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. தொடர்பில்லா பண பரிவர்த்தனை முறை தற்போது பிரபலமாகி வரும் நிலையில், 2016ம் ஆண்டே ‘Yeldi softcom’ நிறுவனம் இந்த சேவையை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அர்ஜுன மூர்த்தி தொலைத்தொடர்பு துறையிலும் அனுபவம் உள்ளவர். ஒரு முறை மொரிஷியஸ் சென்றிருந்த போது சிறிய தொகையை செலுத்துவதில் சிக்கலை உணர்ந்த போது, இதற்கான எளிய தீர்வை வழங்கும் எண்ணம் உருவானதாக அவர் கூறியிருக்கிறார். இந்த எண்ணமே, யெல்டி சாப்ட்காம் நிறுவனமாக உருவானது.

Also Read  இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா?

இது மட்டும் அல்லலாமல், அர்ஜுனமூர்த்தி ஒரு தொடர் தொழில்முனைவோராக விளங்கி வருகிறார். இவர் 30 ஆண்டுகளுக்கு மேல் இத்துறையில் அனுபவம் உள்ளவர், இது மட்டுமின்றி ஜீனி புட்ஸ், மானுமண்ட் மாஸ்மீடியா உள்ளிட்ட நிறுவனங்களையும் துவங்கியிருக்கிறார்.

பின்னர் அவர், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அதன் வர்த்தகப் பிரிவிலும் பின்னர் அறிவுசார் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அண்மையில் பாஜக தமிழகத்தில் நடத்திய வேல் யாத்திரியை ஒருங்கிணைப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். இந்நிலையில்தான் தற்போது, அவர் நடிகர் ரஜினியால் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டு தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Also Read  இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தின் 2-ம் டோஸ் செலுத்தும் பணி தீவிரம்! தமிழகத்தில் 13,191 தடுப்பூசி மருந்துகள் வீண்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல இந்தி நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா

Tamil Mint

35 கி.மீ தூரம் வரை திடீரென பின்னோக்கி சென்ற பயணிகள் ரயில்! – அதிர்ச்சி தரும் வீடியோ!

Shanmugapriya

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

Tamil Mint

பிப்ரவரி 15 முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம்

Tamil Mint

இந்தியாவில் மேலும் 76,472 பேருக்கு தொற்று, ஒரே நாளில் 65 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Tamil Mint

சீனாவுடனான உறவு பழைய நிலைக்கு திரும்புவது கடினம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Tamil Mint

மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

செயற்கைக்கோள் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது பிரதமர் மோடியின் புகைப்படம்!

Tamil Mint

தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஏன்? பாதிக்கப்பட்ட மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு!

Tamil Mint

இந்திய சந்தையில் அறிமுகம் ஆகும் ஒப்போவின் 6 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள்!

Tamil Mint

70 லட்சம் இந்தியர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் டார்க் வெப்பில் அம்பலம்.!

Tamil Mint