அர்ணாப் கோஸ்சுவாமி கைதை கண்டித்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் எழுப்பி வருகின்றனர்


ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் என்று எ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளன 

கட்டிடக் கலைஞர் அன்வே நாயக், மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் என்ற இடத்தில், மே 5, 2018 அன்று தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாயக்கின் மனைவி அக்ஷிதா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தார் என்று கூறுகின்றன. 

Also Read  அமெரிக்க அதிபரின் சம்பளம், வசதிகள் என்னென்ன?

இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ArnabGoswami என்ற ஹேஸ்டேக் தேசிய அளவில் வைரலாகியுள்ளது.இதில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிர்ந்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டரில், பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைக்கு கடும் கண்டனங்கள். பத்திரிகையாளர்களை கையாள்வதற்கு இது சரியான அணுகுமுறை அல்ல. இந்த சம்பவம் அவசர நிலை அமலில் இருந்த தருணத்தை நினைவுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  கொரோனாவால் நீண்ட காலம் நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம் - ஆய்வில் தகவல்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது ட்விட்டரில், பத்திரிகை துறையில் இருப்பவர்கள் அர்னாபிற்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டிய தருணம் இது. அப்படி செய்யவில்லை எனில், நீங்கள் அனைவரும் பாசிசத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதாய் அமைந்துவிடும். இப்படியொரு விஷயத்தில் அடுத்ததாக நீங்கள் சிக்கிக் கொண்டால் உங்களுக்காக யார் குரல் கொடுப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தீபாவளி பண்டிகைக்கு பிறகு நாடு முழுவதும் கொரோனா மீண்டும் கைவரிசை?!

Tamil Mint

பதிப்பாளர் கொலை வழக்கு: 8 பேருக்கு மரண தண்டனை!

Tamil Mint

ஐநாவில் உரையாற்ற போகும் மோடி

Tamil Mint

டிவியில் நொறுக்கு தீனி விளம்பரங்களுக்கு தடை – எங்கு, எதற்கான தெரியுமா?

sathya suganthi

27 நொடிகளில் குழந்தை பெற்றெடுத்த பெண்! – ஆச்சரியமூட்டும் நிகழ்வு!

Shanmugapriya

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை காட்டும் அபுதாபி அரசு….

VIGNESH PERUMAL

காசா முனையில் இருந்து ராக்கெட் தாக்குதல் – இஸ்ரேலின் பதிலடியில் 20 பேர் பலி…!

sathya suganthi

மரண பீதியில் செய்தி வாசித்த செய்தியாளர்: காரணம் என்ன தெரியுமா.?

mani maran

இலங்கை தாதா மரண வழக்கில் பரபரப்பு திருப்பங்கள்

Tamil Mint

ஒரே ஒரு டுவீட்டுதான்…! பிட் காயின் மொத்த மவுசும் காலி…!

sathya suganthi

புதிய ஆப்பிள் ஐபோன் அறிமுகம்

Tamil Mint

தொழில்நுட்ப வளர்ச்சியால் இறந்துபோன தன் மனைவியை சந்தித்த கணவர்! தென்கொரியாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint