அசாமில் கொடூரம்..! அரசு புகைப்பட கலைஞரின் அராஜக செயல்..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #ArrestBijoyBania


பிஜோய் பனியா (30) அரசாங்க வெளியேற்ற இயக்கத்தை ஆவணப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்ட ஒரு புகைப்படக் கலைஞர். இவர் அசாமின் தர்ராங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இவர் புகைப்படம் எடுக்கும் போது போலீசாரால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்த எதிர்ப்பாளர் ஒருவரின் மீது ஏறி மிதித்து குதித்து கொடூரமாக நடந்துகொண்டது தற்போது நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 20ம் தேதி, அசாம் அரசாங்கத்தின் உத்தரவைத் தொடர்ந்து, சிபஜ்ஹார் நிர்வாகம் தர்ராங் மாவட்டத்தில் உள்ள 4,500 பிகா நிலங்களை ஆக்கிரமித்த சுமார் 800 குடும்பங்களை வெளியேற்றியது.

அதையடுத்து மீண்டும் நேற்று 200 குடும்பங்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டபோது துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது.

Also Read  தினமலர் VS பாஜக! செய்தியை நீக்கிய தினமலர்! ரூ.100 கோடி கேட்கும் பாஜக!

இதனால் அங்கே கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் “சட்டவிரோத அத்துமீறல்களுக்கு” எதிராக அரசாங்கத்தின் தொடர்ச்சியான வெளியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்காரணமாக இரு தரப்பிலிருந்தும் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில், குச்சியுடன் இருந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை போலீசார் நெருங்கிய தூரத்திலிருந்து சுட்டு, பின்னர் அவரை கடுமையாக தாக்கினர்.

Also Read  மும்பை: டெம்போவில் வைத்து பாலியல் வன்கொடுமை… பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு..!

அதைத்தொடர்ந்து நிலைகுலைந்து போன அந்த நபர் தரையில் மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் குறித்து சிறப்பு டிஜிபி ஜி.பி. சிங் கூறுகையில், பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பை உறுதி செய்து, ஒன்பது போலீசார் காயமடைந்ததாக கூறினார்.

தர்ராங் காவல் கண்காணிப்பாளர் சுஷாந்த் பிஸ்வா சர்மா ஊடகங்களிடம், “தற்காப்புக்காக காவல்துறை செய்ய வேண்டியதைச் செய்தது” என்று தெரிவித்தார்.

இந்த போலீசாரால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்த நபரின் மீது அரசு புகைப்பட கலைஞர் ஏறி மிதித்து குதித்து கொடூரமாக நடந்துகொண்டது தற்போது நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அவரை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால் #ArrestBijoyBania என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read  முட்டை உண்ணும் அரிய வகை பாம்பு - 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் கண்டுபிடிப்பு

தற்போது இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டில் தற்போது இந்த புகைப்பட கலைஞரின் வெறிச்செயல் பேசுபொருளாகியுள்ளது.

தாக்கப்பட்ட நபர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த புகைப்படக் கலைஞர் இப்படி ஒரு வெறிச்செயலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், பலர் அசாமில் ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மேற்குவங்கம்: பா.ஜ.க., வினர் வாகனங்கள் மீது கல் வீச்சு

Tamil Mint

மீண்டும் மிதக்கும் பிரம்மாண்ட “எவர் கிவன்” – வியப்பில் ஆழ்த்தும் ட்ரோன் காட்சி…!

Devaraj

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை பதவி நீக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

Tamil Mint

திடீரென தீ பிடித்து எரிந்த அரசு பேருந்து…! கோயம்பேட்டில் பரபரப்பு..!

Lekha Shree

பிரதமர் நரேந்திரா மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்

Tamil Mint

“ மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்..” நாராயணசாமி

Ramya Tamil

வினோத திருமணம்: சேலை கட்டிய மணமகன்… பட்டு வேட்டியில் மணமகள்…!

Lekha Shree

வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

suma lekha

தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

Ramya Tamil

மத வேறுபாட்டை தூண்டும் போலி முகநூல் செய்தி… வைரலாகும் உண்மை புகைப்படம்!

Lekha Shree

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – அலுவலகங்கள் 50% மட்டும் இயங்க உத்தரவு…!

Lekha Shree

குழந்தை உயிரை காப்பாற்றிய ரியல் ஹீரோவுக்கு ரூ.50,000 சன்மானம்

Jaya Thilagan