தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் பி. கிருஷ்ணமூர்த்தி மறைவு


பாரதி மற்றும் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி போன்ற தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் பி. கிருஷ்ணமூர்த்தி காலமானார். இவர் ஐந்து முறை தேசிய விருது வென்றவர். இவரின் வயது 77. 

கடலோர நகரமான பூம்புகாரில் பிறந்த கிருஷ்ணமூர்த்தி, 1975 ஆம் ஆண்டில் ஜி.வி. ஐயரின் கன்னட திரைப்படமான  ‘ஹம்சா கீத்’ திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 18 ஆம் நூற்றாண்டின் கர்நாடக இசைக்கலைஞர் பைரவி வெங்கடசுப்பையாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த படம் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது. 

Also Read  'அயலான்' இயக்குனருடன் இணையும் சூர்யா? வெளியான 'புது' அப்டேட்..!

ஜி.வி.அயர் இயக்கிய மாதவச்சார்யா என்னும் திரைப்படத்துக்காக முதல் தேசிய விருதை வென்றார் கிருஷ்ணமூர்த்தி. இருவரும் சேர்ந்து ஆதிசங்கராச்சார்யா (1983), மத்வாச்சார்யா (1986), ராமானுஜாச்சார்யா (1989) போன்ற படங்களில் பணியாற்றியுள்ளனர். 

கிருஷ்ணமூர்த்தி சிறுவயதில் இருந்தே கலையில் நாட்டமுடையவராக இருந்தார். மெட்ராஸில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் இருந்து தனது முறையான பயிற்சியினைப் பெற்றார், பின்னர் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பு நாடகங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கான செட்களை வடிவமைப்பதில் ஈடுபட்டார். 

Also Read  மகளுடன் தல அஜித் இருக்கும் புகைப்படம்... வாழ்த்து தெரிவித்த மோஜன் ஜி..!

40 ஆண்டுகள் சினிமாத்துறையில் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சமஸ்கிருதம், இந்தி, பெங்காலி, கன்னடம், தமிழ், மலையாளம், பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் பணியாற்றியுள்ளார். அவரது பிரபலமான தமிழ் படங்களில்  இந்திரா, சங்கமம், தெனாலி, குட்டி, பாண்டவர் பூமி, அழகி, பாரதி, ஜூலி கணபதி, இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, மற்றும் நான் கடவுள் போன்ற படங்கள் அடங்கும். 

பாரதி திரைப்படத்தில் அவர் செய்த பணிக்காக இரண்டு தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. ராமானுஜன் அவரது கடைசி தமிழ் படம். அப்படம்  2014 இல் வெளியிடப்பட்டது. இயக்குனர்கள் பாரதிராஜா, சிம்பு தேவன் உட்பட பலர் திரு. கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Also Read  கமலுடன் செல்ஃபி எடுத்த பகத் பாசில்! - சூடுபிடிக்கும் 'விக்ரம்' படப்பிடிப்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

Devaraj

“ஆரம்பிக்கலாமா” : வெளியானது பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ.!

mani maran

சதீஷ் நாயகனாக நடித்துள்ள ‘நாய் சேகர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு…!

Lekha Shree

தியேட்டர்களில் வெளியாகும் சாய் பல்லவியின் திரைப்படம்…! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!

Lekha Shree

‘தி பேமிலிமேன் 2’ பட சர்ச்சை – எச்சரித்த சீமான்!

Lekha Shree

“சினிமாதான் என்னை தேர்ந்தெடுத்தது” – உதயநிதி ஸ்டாலின்

Shanmugapriya

தேவா பதவியில் வாகை சந்திரசேகர்: முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு.!

mani maran

மலையாளத்தில் சக்கப்போடு போட்ட “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ரீமேக்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு…!

Bhuvaneshwari Velmurugan

இந்த ஹீரோவுக்கு ஜோடியா வாணி போஜன்? – வெளியான கலக்கல் அறிவிப்பு!

Shanmugapriya

சத்குருவுடன் ஆனந்த நடனமாடிய நடிகை சமந்தா!

Lekha Shree

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Tamil Mint

“சூர்யாவை மிரட்டினால் அவ்வளவு தான்” – பாஜகவை எச்சரித்த சீமான்!

Lekha Shree