அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘தேஜாவு’ மற்றும் ‘டி பிளாக்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!


அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள தேஜாவு மற்றும் டி பிளாக் ஆகிய 2 படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டைரி படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

திரையரங்குகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானவுடன் வெளியீட்டுத் தேதியை படக்குழு முடிவு செய்ய உள்ளது.

டைரி படத்தின் பணிகளை முடித்துவிட்டு இரண்டு படங்களை தொடங்கினார் அருள்நிதி இதில் ஒரு படத்தை புதுமுக இயக்குனர் அரவிந்தும் மற்றொரு படத்தை விஜயகுமார் ராஜேந்திரனும் இயக்கி வந்தார்கள்.

Also Read  நடிகர் ராணா இந்த பிரபல படத்தில் ஒப்பந்தம்....

அருள்நிதி மற்றும் அரவிந்த் இருவரும் இணைந்து உள்ள படத்துக்கு தேஜாவு என பெயரிடப்பட்டுள்ளது. மிஸ்டிரி த்ரில்லராக உருவாகும் இந்த படத்தில் மதுபாலா, மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, தமன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

Also Read  பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா?

இந்த படம் தமிழ்-தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ளது. அருள்நிதி கதாபாத்திரத்தில் தெலுங்கில் நவீன் சந்திரா நாயகனாக நடித்து உள்ளார்.

அதைத்தொடர்ந்து விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கியுள்ள படத்திற்கு டி பிளாக் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Also Read  மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்த 'கர்ணன்'… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த படத்துக்கு ரோன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். யூடியூப் பக்கத்தில் மிகவும் பிரபலமான ‘எருமசாணி’ பக்கத்தை நடத்தி வந்தவர் தான் விஜயகுமார் ராஜேந்திரன்.

தற்போது இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்..! வெளியான செம்ம அப்டேட்!

Lekha Shree

“காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்” – தமிழக அரசு

Lekha Shree

இயக்குனர் மணிரத்தினத்தின் பேவரைட் மூவி இதுதானாம்! – அவர் குறித்த டாப் 10 தகவல்கள் இதோ..!

Lekha Shree

நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

‘குக்கூ’ பட இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்… ராஜூமுருகனின் அண்ணன் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ‘சீதா’ ரோலில் நடிக்கும் ஆலியா பட்டின் First Look poster வெளியாகும் தேதி அறிவிப்பு!

Lekha Shree

“அண்ணாத்த” எனக்கு கடைசி திரைபடமா? கண் கலங்கிய ரஜினி?

HariHara Suthan

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan

நடிகர் ராணா இந்த பிரபல படத்தில் ஒப்பந்தம்….

Devaraj

சத்குருவுடன் ஆனந்த நடனமாடிய நடிகை சமந்தா!

Lekha Shree

மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

Lekha Shree

நடிகர் தனுஷின் ‘தி கிரே மேன்’ குறித்த சூப்பர் அப்டேட்…!

Lekha Shree