28 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு வீடு திரும்பிய ஆர்யன் கான்..!


பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பை சிறையில் இருந்த 28 நாட்களுக்கு பிறகு வெளியே வந்துள்ளார்.

சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் ஆர்யன் கான். அவரை கைது செய்த காவல்துறையினர் ஆர்யன் கானை சிறையில் அடைத்தனர்.

Also Read  ஆர்யன் கானை வரவேற்க போஸ்டர்களுடன் அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்..!

இதை அடுத்து ஆர்யன் கான் சார்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டது. இரண்டு முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், கடந்த 28ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர் நீதிமன்றம்.

ஆனால், அதற்கான ஆவணங்கள் தொலைந்தால் ஆர்யன் கான் சிறையிலிருந்து வெளியே வருவதில் தாமதம் ஏற்பட்டது.

Also Read  மேதாது அணை விவகாரம்: ”பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” - கர்நாடகவின் புதிய முதல்வர்!

இந்த நிலையில் இன்று அதிகாலை ஆர்தார் ரோடு சிறை அதிகாரிகள் ஜாமீன் பெட்டியில் இருந்து ஜாமீன் ஆவணங்களை எடுத்து ஆர்யன் கான் விடுதலைக்கான செயல்முறையை தொடங்கி வைத்து இன்று காலை 11 மணி அளவில் சிறையிலிருந்து விடுதலை ஆனார் ஆர்யன் கான்.

இவரை பிணையில் இருந்து வெளியே கொண்டுவர ஷாருக்கானுடன் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாக நடித்த ஜூஹி சாவ்லா உதவியுள்ளார்.

ஆர்யன் கானுக்கு பிணை வழங்க நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தை செலுத்துமாறு பணித்துள்ளது. அதை அவர் செலுத்த தவறினால் அதற்கு தான் பொறுப்பு ஏற்பதற்கான உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் ஆஜராகி, உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளார் ஜூஹி சாவ்லா.

இதுகுறித்து கூறுகையில் ஜூஹி சாவ்லா, “இதில் முக்கியமானது என்னவென்றால் ஆர்யன் கான் வீட்டிற்கு திரும்புவது தான்” என தெரிவித்துள்ளார்.

Also Read  ஷாருக்கான் அதிரடியால் சையது முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது தமிழ்நாடு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மஞ்சள் உடையில் அசத்தும் ‘பிக் பாஸ்’ கேப்ரியலா…. கலக்கல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

நடிப்பதை தவிர்த்து திருமணத்திற்கு தயாராகும் த்ரிஷா?

suma lekha

அசத்தலான சுவை! – விற்பனையில் பட்டையைக்கிளப்பும் நூர்ஜஹான் மாம்பழம்!

Shanmugapriya

“அன்றோ சொன்ன ரஜினி” – இணையத்தில் ட்ரெண்ட் ஆன ஹாஷ்டேக்…!

Devaraj

வில்லனாக நடிக்கும் WWE ஜான் சீனா..அனல் பறக்கும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 தமிழ் ட்ரைலர்!

HariHara Suthan

நடிகை ஐஸ்வர்யா மேனனின் மொட்டை மாடி போட்டோ ஷூட்.. காட்டுத் தீ போல் பரவும் புகைப்படங்கள் இதோ..!

HariHara Suthan

திருமண பத்திரிக்கையே இவ்வளவு எடையா?? குஜராத்தில் நடந்த பிரம்மாண்ட திருமணம்!!!

Lekha Shree

அடுத்த கட்டத்தை எட்டும் பெகாசஸ் விசாரணை! – உச்சநீதிமன்றம் அதிரடி..!

Lekha Shree

‘சூர்யா 40’ – சூப்பர் அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் ரத்னவேலு..!

Lekha Shree

50 சதவீத மக்கள் முக கவசம் அணிவதில்லை – ஆய்வில் தகவல்

sathya suganthi

கொரோனா தொற்றால் நடிகர் ஜோக்கர் துளசி உயிரிழப்பு

sathya suganthi

202 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய பெண்!!!

Lekha Shree