’நான் ஆணவம் பிடிச்சவன் கிடையாது’- நடிகர் அஸ்வின் விளக்கம்!


என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டின்போது நடிகர் அஸ்வின் கூறியது சர்ச்சையான நிலையில், தற்போது அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

என்ன சொல்ல போகிறாய்’ பட ஆடியோ ரிலீஸின்போது ஆவலோடு காத்திருந்தவர்களுக்கு, அப்படத்தின் ஹீரோ அஸ்வின், “கதை கேட்கும்போது பிடிக்கவில்லையென்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகள் கேட்டு தூங்கியிருக்கிறேன். ஆனால், நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை இது மட்டும்தான்” என்று சொல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

Cooku with Comalis 2 fame Ashwin Kumar Lakshmikanthan announces his silver  screen debut - Times of India

இதனைத் தொடர்ந்து அவர் பேசியது சர்ச்சையாகியிருக்கிறது. சமூக வலைதளங்களில் அஸ்வினுக்கு எதிராக ட்ரோல்ஸ், மீம்ஸ்கள் பாய்ந்து கொண்டிருக்கும் சூழலில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு விளக்கம் அளித்துள்ளார் அஸ்வின்.

அதில், “ என்ன சொல்ல போகிறாய் ஒரு நல்லக் கதை. மக்களுக்கு நல்ல படம் கொடுக்கிறோம் என்று சொல்ல வந்ததைத்தான் மேடையில் ரிலீஸ் பண்ண விடமாட்டேன்னு விளையாட்டுத்தனமா சொல்லிட்டேன். இதனை சரியாக தொடர்புபடுத்திப் பேசாததால் என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.

Also Read  நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் நவம்பர் 12 அன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

அதேபோல, ’எத்தனைப் படம் பண்றோம்ங்கிறதைத் தாண்டி ஒரு நல்லப் படம் பண்ணனும்… அஸ்வின் நல்ல படத்துல நடிச்சிட்டான்னு எல்லோரும் சொல்லணும்… அதுக்கேத்த மாதிரி நான் கதையும் தேர்வு செய்தேன்’ என்பதுதான் மேடையில் நான் சொல்ல நினைத்த விஷயம். ஆனால், அதனை ‘கதை பிடிக்கலைன்னா தூங்கிடுவேன். 40 கதைகள் கேட்டு தூங்கியிருக்கிறேன்’ என்று ஜாலியா பேசிட்டேன். 40 இயக்குநர்களிடம் கதை கேட்டேன் என்பதில் கணக்கே கிடையாது.

மேடையில் இருக்கும்போது ஒரு குத்துமதிப்பா வாயில, அந்த டைம்ல சும்மா ஒரு விஷயம் சொல்லுவோம்லயா… அப்படி வந்ததுதான் 40 கதைகள். குத்துமதிப்பா சொன்னதை திமிரா சொன்னா மாதிரி எடுத்துக்கிட்டாங்க.

Also Read  ’நாங்க சங்கத்துக்கு வேற செயலாளரை தான் பாக்கணும் போல..’ - சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்..!
Silambarasan sir personally called and wished me: Ashwin Kumar  Lakshmikanthan | Tamil Movie News - Times of India

மூனு மணிநேரம் போர் அடிக்காம கதை கேட்டேன் என்று சொல்ல வந்தது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. என்னுடன் இருந்தவர்களுக்கு நான் எந்த அர்த்தத்தில் பேசினேன் என்பது தெரியும்.

என் தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார். அவரது பிள்ளை மாதிரி பார்த்து பார்த்து பண்ணிருக்கார். அவருக்கு எந்த கஷ்டமும் மன உளைச்சலும் வந்துடக்கூடாதுன்னு கடவுளை நம்புறேன். நான் ஆணவம் பிடிச்சவன் கிடையாதுன்னு மக்கள் புரிஞ்சிக்கிட்டாப் போதும்” என்று நடிகர் அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.

Also Read  அண்ணாத்த ரீலீஸிற்கு பிறகு ரஜினியின் ரெஸ்பான்ஸ் என்ன?... மனம் திறந்த சிவா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆரம்பமாகிறது அடுத்த பிக்பாஸ் சீசன்… எப்போது தெரியுமா?

Tamil Mint

“கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

Devaraj

‘குக்கூ’ பட இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்… ராஜூமுருகனின் அண்ணன் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறாரா ஷாலினி?

Tamil Mint

மக்கள் செல்வனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

திரையரங்குகள் திறப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது

Tamil Mint

நடிகர் ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Lekha Shree

பொங்கலுக்கு வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’ பர்ஸ்ட் சிங்கிள்?

Lekha Shree

நடிகர் சூர்யா மனு தள்ளுபடி… விரைவில் மேல்முறையீடு..!

Lekha Shree

‘ஜெய் பீம்’ விவகாரம் – சூர்யா, ஜோதிகா மீது பா.ம.க., போலீசில் புகார்..!

Lekha Shree

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் நடிகர் சதீஷின் ‘நாய் சேகர்’…!

Lekha Shree

விஜய்யுடன் இணையும் தனுஷ்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் Double Treat!

suma lekha