”நீ இன்னும் திருந்தவே இல்லையா”..அஸ்வினை மீண்டும் வம்பிழுக்கும் நெட்டிசன்கள்.!


தன்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் என்ன பேசுகிறோம் என்பதே பேச தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வந்தவர் நடிகர் அஸ்வின் குமார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெண் ரசிகைகள் மத்தியில் பிரபலமானார் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நடித்த ஒரு சில ஆல்பம் பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்த இவர்., தற்போது தான் ஹீரோவாகி இருக்கிறார்.

Also Read  நடிகர் விக்ரமின் 'கோப்ரா' பட படப்பிடிப்பு புகைப்படம் வைரல்..!

தற்போது இவர் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஸ்வின் பேசியது நெட்டிசன்களால் இன்றளவும் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் பேசிய அவர், ”எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க. கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகள் கேட்டு தூங்கியுள்ளேன்” என்று இவர் பேசிய பேச்சால் இவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வந்தனர்.

ஆனால், இதுகுறித்து விளக்கமளித்த அஸ்வின், இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்துவிட்டது நான் மிகவும் கஷ்டமாக இருக்கிறேன். நான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இல்லை என்றாலும் ஒரு கெட்ட எடுத்துக்காட்டாக இருந்துவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அன்று என்னுடைய முதல் படம் என்பதால் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். அங்கு போய் நின்றதும் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவிட்டேன். நான் பேசிய கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என்று மிகவும் சோகத்துடன் தெரிவித்தார். என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் முதலில் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்வைத்து திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அஸ்வினின் சர்ச்சை பேச்சால் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்தது.

இந்த நிலையில் ஆடியோ விழா குறித்து முதல் முறையாக பதிவு ஒன்றை போட்டுள்ள அஸ்வின், “‘இது மிகவும் நம்ப முடியாத ஒரு தருணம். அந்தக் குரல்கள் எல்லாம் இன்னும் எனக்கு கேட்கிறது. இது மிகவும் அருமையான ஒரு அன்பு. எல்லா புகழும் இறைவனுக்கே, மக்களின் அன்பால் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  தெலுங்கில் அறிமுகமாகும் ’குக் வித் கோமாளி’ அஸ்வின்.. வாய்ப்புக் கொடுத்த நானி..!

இந்த பதிவை பார்த்த அஸ்வின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதலாக கூறி வந்தாலும் நெட்டிசன்கள் பலர் இன்னமும் நீ திருந்தவே இல்லையா என்று அஸ்வினை கலாய்த்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரேக்கப் செய்த பிரியா பவானி சங்கர்? அவரே பகிர்ந்த பதிவு…!

suma lekha

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது.!

suma lekha

மாஸ் காட்டும் STR-ன் மாநாடு! ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்…!

HariHara Suthan

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள சாய் பல்லவியின் சாரங்க தரியா பாடல்…!

Lekha Shree

பிக்பாஸ் 5வது சீசன் எப்போது ஆரம்பமாகும்?

Lekha Shree

“தனுசும் நானும் ஒன்றாக படித்தோம்” – மனம் திறந்த குக் வித் கோமாளி பிரபலம்!

Shanmugapriya

இறுதி கட்டத்தை நெருங்கும் ’விக்ரம் 60’… !

suma lekha

புது லுக்கில் கலக்கும் ஃபிட் அஜித், ரசிகர்கள் உற்சாகம்

Tamil Mint

சுதந்திரம் குறித்த சர்ச்சை கருத்து… சிக்கலில் கங்கனாவின் பத்மஸ்ரீ விருது?

Lekha Shree

விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது மாஸ்டர் திரைப்படம்!

Tamil Mint

தல தோனியுடன் கால்பந்து பயிற்சி செய்யும் சினி செலப்பிரட்டி: இணையத்தை கலக்கும் போட்டோஸ்

suma lekha