a

ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் திடீர் விலகல்…! காரணம் இதுதான்…!


14வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் நட்சத்திர வீரரும், தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திர அஸ்வின் 2021 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதாலும், குறிப்பாக தான் குடியிருக்கும் சென்னையில் நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் அஸ்வின் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Also Read  பிரேசிலில் கொரோனாவால் கொத்து கொத்தாக செத்துமடியும் மக்கள் – 4,000யை கடந்த பலி எண்ணிக்கை – அடக்கம் செய்ய இடமின்றி திணறும் அரசு…!

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் விடைபெற்றுக் கொள்கிறேன் என்றும் கொரோனா வைரஸுக்கு எதிராக தன்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அனைத்தும் சரியான திசையில் சென்றால் தான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன் என்றும் நன்றி டெல்லி கேபிடல்ஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகும் 4-வது வீரர் அஸ்வின். ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ், பயோ-பபுள் சூழலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன், ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூடை ஆகியோர் போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Also Read  பஞ்சாபை சமாளிக்குமா ஐதராபாத்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகக்கோப்பை டி20 யில் மேட்ச் பிக்சிங் – வாழ்க்கையை இழந்த கிரிக்கெட் வீரர்கள்

Devaraj

உலகக் கோப்பை கால்பந்தில் நாங்க இல்லாம எப்படி? – ஜெர்மனி, இத்தாலி தகுதி சுற்றில் வெற்றி!

Lekha Shree

விளையாட்டு வீரர்களுக்கு தடையை நீக்கிய தமிழக அரசு

Tamil Mint

உலகிலேயே முதல்முறையாக பாகிஸ்தான் படை சாதனை!

Jaya Thilagan

ஐபிஎல்லில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர்கள்!

Jaya Thilagan

யார்க்கர் மன்னன் நடராஜனுக்கு கிடைத்த ஸ்பெஷல் கிப்ட்!

HariHara Suthan

மெல்பர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்டில் 195 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

Tamil Mint

ஐபிஎல்-ஐ குறிவைக்கும் கொரோனா – சென்னை அணியில் 2 பேருக்கு தொற்று உறுதி..!

Lekha Shree

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்று பெற்ற இந்தியா…! 5 கோடி போனஸ் அறிவித்த பிசிசிஐ…!

Tamil Mint

சதுரங்கத்தில் சாதித்த இந்தியா

Tamil Mint

அம்பயர் நிதின் மேனனுக்கு குவியும் பாராட்டு!

HariHara Suthan

மெல்பர்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய 2 ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரஹானே சதம் விளாசினார்!

Tamil Mint