“சிறந்த பல் மருத்துவரை ஏற்பாடு செய்கிறேன்” – சிறுவர்களின் கடிதத்திற்கு அசாம் முதலமைச்சர் பதில்!


சில தினங்களுக்கு முன் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் இருவர் தங்களின் பற்கள் வளரவில்லை என கூறி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அசாம் மாநில முதல்வருக்கும் பிரதமர் மோடிக்கும் அக்கடிதம் எழுதியிருந்தனர். தற்போது அக்கடிதத்திற்கு அசாம் மாநில முதல்வர் பதிலளித்துள்ளார்.

அசாமை சேர்ந்த சகோதரர்கள் ரிஸ்வான் (6) மற்றும் ஆரியன் (5). இவர்களுக்கு மேலே முன்பற்கள் வளராமல் உள்ளன. இதனால் சுவையான உணவுகள் உண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பற்கள் வளர வேண்டும் என யோசித்தவர்களுக்கு புதுமையான யோசனை கிடைத்துள்ளது.

Also Read  குடலில் துளைகள் ஏற்படுத்தும் வெள்ளை பூஞ்சை..!

அண்ணன் ரிஸ்வான் அம்மாநில முதல்வர் ஹிமந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில். “அன்புள்ள ஹிமந்தா அங்கிள், எனக்கு 5 பற்கள் வளரவில்லை. இதனால் எனக்கு பிடித்த உணவுகளை உண்பதில் சிரமம் ஏற்படுகிறது. தயவுசெய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஹிமந்தா அங்கிள்” என எழுதினார்.

அடுத்து தம்பி ஆரியன் ஒருபடி மேலே போய் பிரதமர் மோடிக்கே கடிதம் எழுதியுள்ளார். அதில், “அன்புள்ள மோடி ஜி, எனக்கு 3 பற்கள் வளரவில்லை. இதனால் பிடித்தமான உணவுகளை மெல்லும்போது சிரமப்படுகிறேன். இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மோடி ஜி” என எழுதினார்.

Also Read  மாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

இந்த கடிதங்களை சிறுவர்களின் மாமா முகநூலில் பதிவிட்டதை அடுத்து இது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.

இதற்கு பலரும் கலகலப்பான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வந்தனர். இந்த கடிதங்கள் வைரலானதை அடுத்து அதற்கு தற்போது அசாம் மாநில முதல்வர் பதிலளித்துள்ளார்.

Also Read  கல்லை எடுப்பதற்கு பதிலாக கிட்னியையே எடுத்த மருத்துவர்கள்! பல ஆண்டுகளுக்கு பிறகு வந்த அதிரடி தீர்ப்பு

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கவுகாத்தியில் உங்களுக்காக சிறந்த பல் மருத்துவரை நான் ஏற்பாடு செய்கிறேன். உங்களுக்கு பிடித்த உணவை நாம் சேர்ந்து சுவைக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

’கனவு நாயகன்’ அப்துல்கலாமின் 90 வது பிறந்தநாள் இன்று..!

suma lekha

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி நீதிமன்றத்தில் மனு

Devaraj

2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசம்; அசத்திய இந்தியா!

Lekha Shree

நாகர்கோவில், மும்பை இடையே சிறப்பு ரயில்கள்

Tamil Mint

திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு

Devaraj

பயணம் மேற்கொள்ள இ பாஸ் கட்டாயம்.. கேரள அரசு அதிரடி..

Ramya Tamil

திருமண விருந்தில் ஆட்டுக்கறி இல்லை! – மணமகளையே மாற்றிய மணமகன்!

Shanmugapriya

கொரோனாவால் பெண் உயிரிழப்பு – மருத்துவமனைக்கு தீ வைத்து சூறையாடிய உறவினர்கள்…!

Devaraj

தினமும் கோமியம் குடிக்கிறேன் – பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு

sathya suganthi

மேற்கு வங்கத்திலிருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்ற வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Tamil Mint

வரதட்சணை கேட்டு ஆணியால் குத்தி கொடுமை! நாட்டையே உலுக்கிய விஸ்மயா மரணம்…!

sathya suganthi

கையில் குழந்தை… சூட்கேசில் மனைவியின் பிணம்… கணவரின் கொடூர கொலை!

Lekha Shree