சென்னையில் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தந்த பயிற்சியாளர் – அதிர வைக்கும் தகவல்கள்


சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்-லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர், 12 முதல் 18 வயதிற்குட்பட்ட இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

Also Read  வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா நோயாளி உயிரிழப்பு..!

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தடகள பயிற்சிக்காக வரும் மாணவிகளுக்கு தலைமை பயிற்சியாளர், பயிற்சி அளிக்கும் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் பயம் காரணமாக புகார் அளிக்கவில்லை என்ற நிலையில் சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் குறித்த விவரங்களுடன் சென்னையைச் சேர்ந்த ஒருவர் டுவிட் செய்துள்ளார்.

Also Read  கடன் சுமை: ஒருவயது குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை

இதை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருவதுடன், பயிற்சியாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

அதில், 50-60 பெண்களுக்கு மேல் பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சியாளர் நந்தனத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பது தெரியவந்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Also Read  "பாலியல் குற்றங்களில் DNA முடிவுகளை மட்டும் குற்றவாளிகள் ஆதாரமாக கூற முடியாது!" - உச்சநீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடி பதிவிட்ட ஆசிரியை பணியிடை நீக்கம்..!

suma lekha

தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்…!

sathya suganthi

மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினி? ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு..!

Lekha Shree

“ஜெயலலிதாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது திமுக… ஆனால் அழுத்தம் கொடுத்தது பாமக தான்” – ஆர்.எஸ். பாரதி

Lekha Shree

தமிழக அரசு அறிவிக்கப்போகும் சென்னை சங்கமம் குழுவில் எம்.பி கனிமொழி ஒதுக்கப்படுகிறாரா?

Lekha Shree

“இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பு” – தமிழக அரசு

Lekha Shree

ராஜஸ்தானுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

Devaraj

‘சசிகலா 2.0!’ – ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா..! பாதுகாப்பு கேட்டு மனு..!

Lekha Shree

ஐபிஎல் முக்கியமா – சாகித் அப்ரிடி விமர்சனம்!

Jaya Thilagan

முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த அதிமுக முன்னாள் எம்.பி.! எதிர்க்கட்சியில் சலசலப்பு..!

Lekha Shree

‘வாழும் புரட்சி தலைவர்’ – முதல்வரை புகழ்ந்து கட்அவுட்! ரசித்து செல்லும் மக்கள்!

Tamil Mint

எச்சில் துப்பி தயாரிக்கப்படும் ரஸ்க்… வைரலான வீடியோ… பேக்டரிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

Lekha Shree