a

சொந்த ஏற்பாட்டில் ஆஸ்திரேலியா வாருங்கள் – ஐபிஎல் வீரர்களுக்கு ஆஸி., பிரதமர் அட்வைஸ்


நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து வந்து செல்ல அனைத்து விமானங்களையும் மே 15ம் தேதி வரை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் சொந்த முயற்சியில் நாடு திரும்புமாறு அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என்பதால் அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை வைத்து நாடு திரும்ப வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Also Read  சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இரவு நேர சிறப்பு பேருந்து

இதனிடையே தனி விமானத்தில் நாடு திரும்புவதற்கு அரசு அனுமதி அளிக்கும் என நம்புவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான கிறிஸ் லின், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக ஆண்ட்ரியு டை, ஆதம் சாம்பா, ரிச்சர்ட்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Also Read  சென்னை சூப்பர் கிங்சுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு - சென்னையை சமாளிக்குமா ஐதராபாத்?

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெற்றி நடை போடுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

Lekha Shree

சென்னையில் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே! விரைவில் ‘தல’ தரிசனம்!

Jaya Thilagan

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சமாளிக்குமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?

Lekha Shree

மும்பை அணிக்கு எதிரான வெற்றியை கோட்டை விட்டுவிட்டு ரசல் கூறிய விளக்கம்!

Lekha Shree

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு ஒரு நல்ல செய்தி!

Devaraj

தோனியா – கோலியா : ஜெயிக்கப் போவது யார்?

Devaraj

ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! ட்ரெண்டாகும் Cancel IPL ஹேஷ்டேக்!

Lekha Shree

வேணும்னு பண்ணல.. மொகாலியில் ஐபிஎல் நடத்தாததற்கு இதுதான் காரணம்! வாய்திறந்த பிசிசிஐ

Jaya Thilagan

இணையத்தை கலக்கும் CSK Vs RCB மீம்ஸ்கள்…!

Lekha Shree

வார்னருக்கு செக் வைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்! வெளியில் உட்கார வைக்கப்படுவாரா – புதிய கேப்டன் யார்?

Lekha Shree

போர்களமான வான்கடே – வெற்றியை பறித்த சி.எஸ்.கே!

Jaya Thilagan

உதவிக்கு முன் வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

Jaya Thilagan