விரைவில் சர்வதேச சுற்றுலா மையமாகும் அயோத்தி..!


பிரதமர் மோடியிடம் உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தீபாவளி பண்டிகை முதல் சரயு நதியில் படகு சவாரி துவங்கும் என்றும் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அங்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது.

இதை அடுத்து அயோத்தியை சர்வதேச ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற பல கோடி ரூபாய் செலவில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அயோத்தி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் உடன் பிரதமர் மோடி சமீபத்தில் ஆய்வு செய்தார்.

Also Read  5ஜி டெஸ்டிங்கால் கொரோனா அதிகம் பரவுகிறதா…?

அப்போது அயோத்தியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் யோகி ஆதித்யநாத் சமர்ப்பித்தார்.

அதில், “அயோத்தியில் பிரம்மாண்டமான சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. அத்துடன் அயோத்தியில் ஓடும் சரயு நதியில் தீபாவளி பண்டிகை முதல் படகு சவாரியை துவங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Also Read  "நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதீர்கள்" என்ற வாசகத்துடன் வைரலாகும் பெட்ரோல் பில்!

இராமபிரான் 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததை நினைவு கூறும் வகையில் அயோத்தியில் அரசு-தனியார் பங்களிப்புடன் சரயு நதிக்கரையில் ராமவனம் உருவாக்கப்பட உள்ளது.

மேலும்,1,200 ஏக்கரில் வேதிக் நகரம் அமைக்கப்படவுள்ளது. டெல்லி சாணக்கியாபுரி பகுதியில் உள்ளது போல் மாநில மற்றும் வெளிநாட்டு இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன.

Also Read  ஓட்டுநர் உரிமம் - புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையம் அமைக்கப்படும். தினமும் 2 லட்சம் பக்தர்கள் வந்து தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன. ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நடக்கும்போது அயோத்தியின் முகமே முற்றிலும் மாறி இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகளிர் தினத்தன்று பெண்கள் செல்போன் வாங்கினால் 10% தள்ளுபடி! – ஆந்திர அரசு அதிரடி

Shanmugapriya

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

கொரோனா பரவல் எதிரொலி – திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!

Lekha Shree

சேவை கட்டண உயர்வை ஒத்திவைத்த ஜியோ… குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்!

Tamil Mint

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திரைப்படத்தின் டீசர் வெளியீடு

Tamil Mint

கொரோனாவால் மரணத்தின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்த தாய்… உருக்கமாக பாடல் பாடிய மகன்..!

Lekha Shree

இந்திய சந்தையில் அறிமுகம் ஆகும் ஒப்போவின் 6 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள்!

Tamil Mint

ஐபிஎல் தொடரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது பெற்ற வீரர்கள் விவரம்: 

Tamil Mint

6 மாத குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த தாய்… காரணம் இதுதான்..!

Lekha Shree

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

Tamil Mint

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை தொடர்பு மொழியாக பயன்படுத்துங்கள்: அமித் ஷா

Tamil Mint

உணவுப் பட்டியலில் இருந்து கோழிக்கறியை நீக்க முடிவு! எங்கு தெரியுமா?

Lekha Shree