அயோத்தி: பாபர் மசூதியின் மாதிரி வரைபடம் வெளியீடு


அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 9-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு வழங்க உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.

மேலும் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டப்பட்டது.

அதன்படி, தான்னிப்பூரில் புதிய மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

Also Read  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது!!

உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் அமைத்துள்ள அறக்கட்டளை, இந்த நிலத்தில்  புதிய மசூதியை கட்டவிருக்கிறது.

புதிய மசூதிக்கு அடுத்த மாதம் 26-ந் தேதி அடிக்கல் நாட்ட உள்ளனர். ஒரே நேரத்தில் 2,000 பேர் தொழுகை நடத்தும் அளவில் பிரமாண்ட மசூதி கட்டப்படவுள்ளது. 

Also Read  கேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

இந்நிலையில்,  பிரமாண்டமாக கட்டப்பட உள்ள மசூதியின் மாதிரி படத்தை இந்திய இஸ்லாமிய கலச்சார அமைப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் மசூதியின் பின்பகுதியில் மருத்துவமனை இடம்பெறும் வகையில் மாதிரி படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சூரிய மின்சக்தி வசதியையும், இயற்கை வெப்ப நிலை பராமரிப்பு முறையையும் கொண்டதாக புதிய மசூதி அமையும் என்றும் பன்முக சிறப்பு ஆஸ்பத்திரியுடன் நர்சிங் கல்லூரியும், மருத்துவ சார்பு கல்லூரியும் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

Also Read  அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ! - குவியும் பாராட்டுகள்!

இந்த வரைபடங்களை தலைமை கட்டிட கலைஞர் எஸ்.எம். அக்தர் இறுதி செய்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகளுக்கு பதிலாக பள்ளிக்கு சென்ற தாய்! – எதற்காக தெரியுமா?

Shanmugapriya

பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளதாக காங். மூத்த தலைவர்கள் மீது ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு.

Tamil Mint

இந்தியாவில் புதிதாக 90,000 பேருக்கு கொரோனா

Tamil Mint

பிரதமர் மோடி உரையின் முக்கிய அறிவிப்புகள்…!

Lekha Shree

இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி – பட்டாசு வெடித்து கொண்டாடிய இருவர்! காரணம் இதுதான்!

Lekha Shree

சதுரங்கத்தில் சாதித்த இந்தியா

Tamil Mint

இறந்த தாய் உடலருகே குட்டி யானை பாசப்போராட்டம்… கேரளாவில் நெஞ்சை உருக்கும் சம்பவம்!

Tamil Mint

‘காதல் கோட்டை’ பட பாணியில் ஒரு நிஜ காதல் கதை…! காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன்!

Lekha Shree

டெல்லியில் உருகிய தார் சாலைகள்…! 76 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச வெப்பநிலை…!

Devaraj

நான் முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

Tamil Mint

இறுதிச்சடங்கின் போது கண்விழித்து எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியடைந்த உறவினர்கள்! நடந்தது என்ன?

Lekha Shree

பிரதமர் மோடி-முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு நிறைவு…!

Lekha Shree