கோவை: பூனைகளுக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி…! ஆச்சரியத்தில் மக்கள்..!


கோவையில் கருவுற்ற இரண்டு பூனைகளுக்கு சீர்வரிசையுடன் அதன் உரிமையாளர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது பலரது கவனத்தை ஈர்த்து, அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் பலர் தங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை தங்கள் வீட்டில் ஒருவராக பாவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் செல்ல பிராணிகளுக்கு அனைத்து வசதிகள் செய்து அவை மீது சொத்து எழுதி வைக்கும் அளவிற்கு செல்ல பிராணிகள் மீது அதீத பாசம் வைக்கின்றனர்.

Also Read  "மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கும்" - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

இந்நிலையில், கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த உமா மகேஸ்வரன்-சுபா தம்பதியினர் தங்கள் வீட்டில் 2 பிரிஸ்டின் இன பூனைகளை வளர்த்து வருகின்றனர்.

ஜீரா மற்றும் ஐரிஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த பெண் பூனைகள் இரண்டும் கருவுற்றிருப்பது தெரியவந்ததை அடுத்து, அந்த பூனைகளுக்கு வளைகாப்பு செய்ய உமா மகேஸ்வரன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

Also Read  கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

அதன்படி தனியார் மருத்துவமனையில் ஒரு அறை அலங்கரிக்கப்பட்டு, இரண்டு பூனைகளுக்கும் வளைகாப்பு நடைபெற்றது.

அதில், சீர்வரிசையாக தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், சாக்லேட்டுகள் வைத்து சடங்குகள் செய்யப்பட்டன.

குடும்பத்தில் ஒருவரைப் போன்று பூனைகளுக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அஜித்தின் ‘வலிமை’ குறித்த அதிரிபுதிரி அப்டேட்

Tamil Mint

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்

Tamil Mint

தமிழக பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தடை

Tamil Mint

சென்னையில் 50 சதவீத மக்கள் முக கவசம் அணிவது இல்லை: மாநகராட்சி ஆணையர் வேதனை

Tamil Mint

எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றி சாதனை.!

mani maran

நீட் தேர்வு முடிவால் மாணவர் தற்கொலை..!

suma lekha

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான்… : துரைமுருகன் பேட்டி

Tamil Mint

செவிலியர்கள் பாதங்களில் மலர் தூவி நன்றி கூறிய வழக்கறிஞர் – அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்…!

sathya suganthi

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்:

Tamil Mint

உடைகிறதா அதிமுக – பாஜக கூட்டணி? பாஜக போடும் பலே திட்டம் கை கொடுக்குமா?

sathya suganthi

பாடத்திட்டத்தை குறைப்பது குறித்த அறிக்கை முதல்வரிடம் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

Tamil Mint

சென்னை: லீலா பேலஸ் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint