a

ரைசா அனுப்பிய நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ்: பெண் மருத்துவர் அதிரடி!


சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறாக கருத்துக்களையும், வீடியோக்களையும் பதிவிட்ட நடிகை ரைசா வில்சன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என பெண் மருத்துவர் பைரவி செந்தில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோரி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட தவறினால், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடருவேன் என்றும் பெண் மருத்துவர் எச்சரித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில், மருத்துவர் பைரவி செந்திலிடம் நடிகை ரைசா வில்சன் முகப்பொலிவு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக அவருக்கு முகத்தின் சில இடங்களில் வீக்கமும், ரத்தக் கசிவும் ஏற்பட்டதாக, சமூக வலைதளங்களில் நடிகை ரைசா பதிவிட்டார்.

Also Read  ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

இது ரைசாவின் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

இதன் தொடர்ச்சியாக தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என மருத்துவர் பைரவி செந்திலுக்கு, தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார் நடிகை ரைசா.

Also Read  இயக்குனர் வெங்கட்பிரபு வீட்டில் நிகழ்ந்த சோகம்…! திரைப்பிரபலங்கள் இரங்கல்!

இந்த நிலையில் தான், பெண் மருத்துவர் பைரவி செந்திலும், தனது வக்கீல் நாகேஷ்வர ராவ் மூலம் நடிகை ரைசாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், முகப்பொலிவு சிகிச்சை குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறான கருத்துக்களை ரைசா வெளியிட்டு வருவதாகவும், தன் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் ரைசாவின் செயல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூகத்தில் தனக்கு உள்ள நற்பெயரை சீர்குலைக்கும் நோக்கில் ரைசா நாடகம் ஆடுவதாகவும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, 3 நாட்களுக்குள் தனது செயலுக்காக நடிகை ரைசா எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்பதுடன், அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மன்னிப்பு கேட்காவிட்டால் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பைரவி செந்தில் எச்சரித்துள்ளார்.

Also Read  நடிகர் தனுஷின் 'தி கிரே மேன்' குறித்த சூப்பர் அப்டேட்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ் காட்டும் STR-ன் மாநாடு! ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்…!

HariHara Suthan

விஷாலின் ‘சக்ரா’ திரைப்படம் ஒடிடியில் வெளியீடு!

Tamil Mint

விவசாயிகள் போராட்டம்… “அசுரன்” டீமில் இருந்து வந்த அழுத்தமான ஆதரவு குரல்…!

Tamil Mint

மாஸ்டர் பவானியின் காரை இயக்கிய பவானி! வைரலாகும் புகைப்படம் இதோ!

HariHara Suthan

இளம்வயது புகைப்படம் வெளியிட்ட 80ஸ் நடிகை… குவியும் லைக்குகள்!

Lekha Shree

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா… திரையிடலில் இடம் பெற்ற படங்கள் இதோ…!

Tamil Mint

மூன்று நாட்களில் ரூ. 100 கோடி வசூலா? பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிடும் விஜய்யின் ‘மாஸ்டர்’!

Tamil Mint

மு.க.ஸ்டாலினுக்கு சிவக்குமார், சூர்யா வைத்த சூப்பர் கோரிக்கை…!

sathya suganthi

விஜய் டி.வி. நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் ஜோடி… வைரலாகும் காதலர்களின் க்யூட் போட்டோ…!

Tamil Mint

பாண்டியன் ஸ்டோர்ஸ் திருமண வைபோகம்; சூப்பர் பிரமோ இதோ!

Devaraj

ரஜினியின் ரீல் மகளுக்கு கொரோனா…!

Devaraj

“காதலில் விழுந்தேன்”… காதலியின் போட்டோவை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகர்…!

Tamil Mint