பட்டப்பகலில் வங்கி மேலாளரை சுட்டுக் கொன்று பணம் கொள்ளை!!!


புனேவில் பட்டப்பகலில் வங்கி மேலாளரை சுட்டுக் கொன்று பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புனே மாவட்டம், தண்டாலி கிராமத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி கிளை, நேற்று வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.அப்போது, தலையில் ஹெல்மெட் அணிந்தபடி இரண்டு பேர், வங்கிக்குள் நுழைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் சரமாரியாக சுட்டனர். இதைப்பார்த்து வங்கியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

கொள்ளையர்கள் சுட்டதில் வங்கி மேலாளர் ராஜேந்திரா மீது குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அவர் விழுந்தார். இதன்பின், கொள்ளையர்கள் வங்கியிலிருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.தகவல் அறிந்து வந்த போலீசார், மேலாளரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Also Read  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு சூப்பர் சலுகை அறிவித்த ஏர்லைன்ஸ் நிறுவனங்கள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? – கமல்ஹாசன்

Tamil Mint

மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு : இல்லத்தரசிகள் ஷாக்

suma lekha

வினோத திருட்டு… வியப்பூட்டும் தகவல்கள்… கைலாஷ் செய்தது என்ன?

VIGNESH PERUMAL

குழந்தை உயிரை காப்பாற்றிய ரியல் ஹீரோவுக்கு ரூ.50,000 சன்மானம்

Jaya Thilagan

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்..!

Lekha Shree

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று…!

Devaraj

வங்காள விரிகுடாவில் உருவானது ‘யாஸ்’ புயல் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி வீட்டில் பாகப் பிரிவினை…! யார் யாருக்கு என்ன சொத்து…!

sathya suganthi

“ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைந்தவுடன் சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்” – மத்திய அரசு!

suma lekha

லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது!

Lekha Shree

திருமண விருந்தில் ஆட்டுக்கறி இல்லை! – மணமகளையே மாற்றிய மணமகன்!

Shanmugapriya