Battlegrounds Mobile India: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்!


பப்ஜி விளையாட்டின் புதிய பரிணாமமான Battlegrounds Mobile India ஆன்லைன் விளையாட்டு இன்று இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக மட்டும் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ், மிகவும் பிரபலமான PlayerUnknown’s Battlegrounds (PUBG) மொபைல் உட்பட தேசிய பாதுகாப்பு தொடர்பான 118 பயன்பாடுகளை இந்திய அரசு செப்டம்பர் 2 ம் தேதி தடை செய்தது.

Also Read  பாஜக தேசிய மகளிரணி தலைவர் ஆனார் வானதி சீனிவாசன், குஷ்புவுக்கும் விரைவில் புது பதவி

உலகளவில் 600 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் 50 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள PUBG, இந்தியாவில் கிட்டத்தட்ட 33 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்தது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த விளையாட்டு தற்போது புதிய பரிணாமத்தில் மீண்டும் அறிமுகம் ஆகியுள்ளது.

Also Read  2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசம்; அசத்திய இந்தியா!

இருப்பினும், இந்த விளையாட்டு PUBG மொபைல் விளையாட்டாக இந்தியாவில் அறிமுகமாகாமல் Battlegrounds mobile india என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது.

Battlegrounds Mobile India வீடியோ கேம் விளையாட்டுக்கான முன்பதிவு இப்போது கூகிள் பிளே ஸ்டோரில் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பலர் முன்பதிவு செய்தனர்.

Also Read  டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகளின் அனல் கிளப்பும் போராட்டம் - இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்.

இதனிடையே, பலர் அந்த கேமை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். PUBG விளையாட்டின் புதிய பரிணாமமான Battlegrounds கேமிற்கு கடக்கும் எதிர்ப்புகள் உண்டாகியது. அந்த கேமை இந்தியாவில் தடை செய்ய கோரி பலர் ட்விட்டரில் ட்வீட் செய்தனர்.

பல இந்திய அரசியல் பிரமுகர்களும் இந்த கேமை தடை செய்ய என பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு காரணம் இந்த கேமை உருவாக்கிய Krafton நிறுவனம் சீன நாட்டை சேர்ந்த நிறுவனம். இந்த கேம் மூலம் சீன நாடு நம் நாட்டின் பாதுகாப்பையும் நம் மக்களின் பிரைவசியையும் குலைக்க நேரிடும் என பலர் அச்சம் தெரிவித்தனர்.

பப்ஜி மொபைல் கேம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தாலும் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா செயலி இன்று இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக மட்டும் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை

Tamil Mint

சுதந்திர தினத்தன்று அறிமுகமாகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்?

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா பரவலால் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!

Lekha Shree

மேற்குவங்கம்: பா.ஜ.க., வினர் வாகனங்கள் மீது கல் வீச்சு

Tamil Mint

பாஜகவை அவர்கள் பாணியிலேயே அடிக்கும் மம்தா! 2024 தேர்தலிலுக்கான மாஸ்டர் பிளான்!

Lekha Shree

ஜிஎஸ்டி இழப்பீட்டு கடனாக மாநிலங்களுக்கு ரூபாய் 6000 கோடி வழங்கியது மத்திய அரசு

Tamil Mint

மாமன் மகன்களோடு செல்போனில் பேசியதால் அடி உதை! ஊரே பார்க்க கொடுமைப் படுத்திய அதிர்ச்சி வீடியோ!

sathya suganthi

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்…! உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!

sathya suganthi

கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.. இன்று பதவியேற்பு விழா!

suma lekha

புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி…!

Lekha Shree

“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்” – ஒரே நாளில் சோனியா, கெஜ்ரிவாலை சந்தித்த மம்தா பானர்ஜி..!

Lekha Shree

பஞ்சாப் பகீர்: விஷசாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Tamil Mint