கொரோனா பரவல் – ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்!


கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மே 30ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் தற்பொழுது போட்டிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

14வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கொரோனாவுக்கு மத்தியிலும் ரசிகர்கள் இல்லாமலும் நடைபெற்றது ஐபிஎல் போட்டிகள்.

Also Read  ஐபிஎல் மும்பை VS கொல்கத்தா போட்டி! பங்கமாக கலாய்த்த சேவாக்…

ஆனால், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதவிருந்தன. ஆனால், அந்த ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அந்த அணியின் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பெங்களூரு-கொல்கத்தா இடையிலான போட்டியை தேதி அறிவிப்பு இல்லாமல் ஒத்திவைத்தது பிசிசிஐ.

Also Read  மாஸ் காட்டிய சச்சின், யுவராஜ் - தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா!

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை அந்த அணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தை பராமரிக்கும் கிளீனர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இதனால், இன்று பிசிசிஐ ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம் என அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! ட்ரெண்டாகும் Cancel IPL ஹேஷ்டேக்!

Lekha Shree

கெத்து காட்டிய ஜடேஜா – சென்னை சூப்பர் கிங்ஸ் மெர்சல் வெற்றி!

Jaya Thilagan

கொரோனா பரவலில் ஐபிஎல் முக்கியமா – கில்கிறிஸ்ட் கேள்வி!

Devaraj

எங்கடா கேதர் ஜாதவ்? – ஆதரவு குரல் எழுப்பும் ரசிகர்கள்!

Devaraj

ஐபிஎல் 2021: மீதமுள்ள போட்டிகளை இந்த மாத இறுதியில் நடத்த முடிவு?

Lekha Shree

வெற்றி நடை போடுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

Lekha Shree

மும்பை – டெல்லி இன்று மோதல்!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: மும்பை அணிதான் சாம்பியன் – சொல்வது யார் தெரியுமா?

Lekha Shree

ஐபிஎல் சேசிங்கில் வீரர்கள் தடுமாறுவது ஏன்?

Lekha Shree

சென்னை சூப்பர் கிங்சுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு – சென்னையை சமாளிக்குமா ஐதராபாத்?

Jaya Thilagan

எம்.எஸ் தோனியின் புதிய சாதனை!

Devaraj

வேஷ்டி, சட்டை,பட்டிமன்றம் என தமிழ் புத்தாண்டை கொண்டாடிய சி.எஸ்.கே அணி வீரர்கள்!

HariHara Suthan