a

பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!


அமெரிக்காவின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களுள் ஒன்று எல்லோஸ் ஸ்டோன் பூங்கா. இந்த பூங்காவில் எரிமலை, கிரஸ்லி கரடிகள், ஓநாய் மற்றும் நரிகள், காட்டு எருமைகள் என அரிய வகை விலங்குகள் உள்ளன.

தற்போது கோடை காலத்தின் இறுதி பகுதியும் வசந்த காலத்தின் தொடக்கமாகவும் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை இந்த ஆண்டு களைகட்டி வருகிறது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்குள்ள விலங்குகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

Also Read  பால்கனியில் இருந்து தடுமாறி கீழே விழுந்த நபரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய இளைஞர்! - வைரலாகும் சிசிடிவி காட்சி

ஆனால், புகைப்படம் எடுப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளை பூங்கா அதிகாரிகள் விதித்துள்ளனர்.

அந்த விதிகளை பின்பற்றாத பெண் ஒருவர் கரடிக்கு அருகாமையில் சென்று புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளார்.

அப்போது தன் குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த கரடி திடீரென அந்தப் பெண்மணியைத் தாக்க வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணி அந்த இடத்தை விட்டு ஓடி விடுகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல மில்லியன் பார்வைகளை பெற்றது. பூங்கா அதிகாரிகளின் கவனத்துக்கும் இந்த வீடியோ சென்ற நிலையில் அவர்கள் சுற்றுலா பயணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Also Read  மீண்டும் மிதக்கத் துவங்கிய 'எவர் கிவன்' கப்பல்….!

100 மீட்டர் தொலைவில் இருந்த மட்டுமே விலங்குகளைப் பார்க்க வேண்டும் என சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிர்வாகம் அந்த பெண்ணின் அடையாளத்தை கொடுக்குமாறு சமூகவலைதளத்தில் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், விதிகளை முறையாக பின்பற்றி பூங்கா நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் மீறுவோர் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

ரசிப்பதற்காக பூங்காவுக்கு செல்லும்போது விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் இதுபோன்ற சில நபர்கள் செய்யும் தவறான செயல் பலருக்கும் அது முன்னுதாரணமாகி விடுவதாகவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read  இந்தியாவுக்கு டுவிட்டர் நிறுவனம் கொரோனா நிவாரண நிதி - எவ்வளவு கோடி தெரியுமா…!

மேலும், ஒருவேளை அந்தப் பெண் கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் அபராதம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இணையத்தில் டிரெண்டு ஆகும் MenToo ஹேஷ்டேக்…!

Devaraj

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்…!

sathya suganthi

நடுரோட்டில் வைத்து ஒருவரை சரமாரியாக தாக்கிய போக்குவரத்து காவலர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Shanmugapriya

புத்தரைப் போல அமர்ந்துள்ள ட்ரம்ப் – சீனாவில் விற்பனையாகும் அசத்தலான சிலை!

Shanmugapriya

7500 காயின்கள்….. 9 மணி நேரத்தில் மாடுலர் கிச்சன் ஆக்கிய பெண்!

Shanmugapriya

“மன்னித்துவிடுங்கள்…. நான் சாப்பிட்டுவிட்டேன்” – உணவை சாப்பிட்டுவிட்டு, வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய டெலிவரி பாய்!

Tamil Mint

40 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை – வீடு, கார், மனிதன் என எதையும் விட்டு வைக்காத சாம்பல் புழுதி…!

Devaraj

கொரோனா தடுப்பூசி: உலகளவில் இந்தியா படைத்த சாதனை என்ன தெரியுமா?

sathya suganthi

குப்பையோடு போக இருந்த ரூ.7.5 கோடி லாட்டரி பணம் – கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த இந்தியர்!

sathya suganthi

அண்டார்டிகாவால் உலகிற்கு காத்திருக்கும் கண்டம் – 10,000 ஆண்டுகளில் இல்லாத அளவு உருகும் பனி பாறைகள்

sathya suganthi

உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…! மனைவிக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கணவர்களே பொறுப்பு…

VIGNESH PERUMAL

5 வயது சிறுவனுக்கு கைவிலங்கு மாட்டிய போலீசார்…! இது தான் காரணமா?

Devaraj