பந்துவீச்சாளர்களுக்கு நியாயமாக நடந்துகொள்வோம்: சச்சின் டெண்டுல்கர் வைரல் பதிவு.!


பந்துவீச்சாளர்களுக்கு நியாயமாக நடந்துகொள்வோம் என்று சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட், சிட்னியில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தின் 31வது ஓவரின் கிரீன் வீசினார். அப்போது பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

அவருடைய முதல் பந்து ஸ்டோக்ஸை போல்ட் செய்தது. ஆனால் பந்து ஸ்டம்பில் பட்டதே தவிர பைல்ஸ் கீழே விழவில்லை. நடுவர் பால் ரீஃபில், பந்து ஸ்டோக்ஸின் காலில் பட்டது என்று நினைத்து எல்பிடபிள்யூவுக்கு அவுட் கொடுத்தார்.

இதை 3-வது நடுவரிடம் முறையீடு செய்தார் ஸ்டோக்ஸ். ரீபிளேவில் தான் பந்து ஸ்டம்பில் பட்டு பைல்ஸ் கீழே விழாமல் இருந்தது தெரிய வந்தது. இதனால் தப்பித்த ஸ்டோக்ஸ் தொடர்ந்து விளையாடி 66 ரன்கள் எடுத்துக் கடைசியில் லயன் பந்துவீச்சில் அவுட்டானார்.

Also Read  ஒலிம்பிக் கோல்ஃப்: இந்தியாவின் அதிதி அசோக் அதிர்ச்சி தோல்வி…!

பந்து ஸ்டம்பில் பட்டும் பைல்ஸ் கீழே விழாத சம்பவம் கிரிக்கெட் உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், பந்து ஸ்டம்புகளில் மோதி பைல்ஸ் கீழே விழவில்லையென்றால் ஸ்டம்புகளில் மோதிய பந்து என விக்கெட்டை அளிக்கும் ஒரு விதிமுறையை அறிமுகப்படுத்த வேண்டுமா? எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்? பந்துவீச்சாளர்களுக்கு நியாயமாக நடந்துகொள்வோம் என்று சேன் வார்னை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

Also Read  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்திய அணி பேட்டிங்!

அதற்கு பதில் அளித்த சேன் வார்னே ”சுவாரசியமான & விவாதிக்க வேண்டிய ஒன்று நண்பரே. நான் இதை ஐசிசி விவாதத்திற்கு எடுத்துச் சென்று மீண்டும் உங்களிடம் வருவேன். இன்று அப்படி எதையும் பார்த்ததில்லை – கிரீனின் பந்து வீச்சு 142 கிமீ வேகத்தில் ஸ்டம்பில் அடித்தது என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு.!

suma lekha

இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு..!

Lekha Shree

ஐபிஎல் 2022: புதிய அணியை வாங்கும் மேன்செஸ்டர் யுனைடெட்?

Lekha Shree

“எங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடினார் கோலி… அதனால் வென்றோம்!” – டீன் எல்கர்

Lekha Shree

ஐபிஎல் 2022: புதிதாக 2 அணிகள் சேர்க்கும் திட்டம்… ரூ.5,000 கோடி வருமானம் ஈட்டும் பிசிசிஐ?

Lekha Shree

ஓய்வு பெற்றது “வேகப்புயல்” : டேல் ஸ்டெயின் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

mani maran

இஷான் கிஷன், கோலி அதிரடி! – இங்கிலாந்துக்கு திருப்பி கொடுத்த இந்தியா!

Lekha Shree

கெத்தா விளையாடிய யுனிவர்சல் பாஸ் – அதிக சிக்சர்களை குவித்து சாதனை!

Devaraj

தோனி முன் பவ்வியமாக நின்ற விராட் கோலி – பவர் பிளேயில் மாஸ் காட்டிய சென்னை அணி!

Devaraj

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் – இந்திய வீராங்கனை மேரிகோம் தோல்வி..!

Lekha Shree

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்!

Tamil Mint

ஐபிஎல் மும்பை VS கொல்கத்தா போட்டி! பங்கமாக கலாய்த்த சேவாக்…

HariHara Suthan