“அப்படி என்ன இருக்கு?” – மலைக்கா அரோரா முதல் விராட் கோலி வரை அருந்தும் கருப்பு தண்ணீர்..!


கருப்பு தண்ணீர் தற்போது பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக மலைக்கா அரோரா, சுருதி ஹாசன் என பல பாலிவுட் நட்சத்திரங்கள் இதை அருந்துகின்றனர். அதிலும் உடற்பயிற்சி செய்யும் வேளைகளில் இந்த தண்ணீரை பெரும்பாலும் அருந்துகின்றனர்.

சமீபத்தில் சுருதி ஹாசன் இந்த கருப்பு தண்ணீர் குறித்து, “கருப்பு தண்ணீரை நான் அருந்தும்போது மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். இது தண்ணீரைப் போலவே சுவைக்கிறது” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் இதை அருந்துவது தெரியவந்துள்ளது.

இந்த கருப்பு தண்ணீர் ஒரு லிட்டர் விலை ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இதில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற கேள்வி பலரிடம் தற்போது எழுந்துள்ளது.

Also Read  இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி - இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் மல்யுத்த வீரர் ரவிக்குமார்..!

இதுகுறித்து விளக்கிய பாட்டியா மருத்துவமனையின் உணவியல் துறை தலைவர் டாக்டர் பூஜா தாக்கர், “கருப்பு தண்ணீர் என்பது ஃபுல்விக் அமிலம் (FvA). சில கனிமங்கள் மற்றும் வைட்டமின் கொண்ட நீர்” என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த தண்ணீர் நீரேற்றத்துடன் இருக்கவும், pH அளவு மற்றும் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது என்றும் அவர் கூறினார்.

Also Read  'தளபதி 65' படம் மூலம் தமிழில் கால்பதிக்கும் பிரபல மலையாள நடிகர்…!

வழக்கமான தண்ணீரில் குளோரின் மற்றும் சுண்ணாம்பு, 6.5-7.5 pH அமிலம் இருக்கும். ஆனால் கருப்பு தண்ணீரின் pH அளவு 7.5-ஐ விட அதிகமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நன்மைகள்: கருப்பு தண்ணீர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் வீக்கத்தைக் குறைக்கிறது. இந்த நீரில் இயற்கையான கருப்பு காரச்சத்து உள்ளது.

Also Read  'ட்விட்டர் இந்தியா': குறைதீர்க்கும் அதிகாரியாக வினய் பிரகாஷ் நியமனம்..!

குறிப்பாக அல்சைமர் நோயிலிருந்து பாதுகாத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த கருப்பு நீரானது சாதாரண நீரை காட்டிலும் மிகுந்த ஆற்றல் வாய்ந்தது.

இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் நிலையாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த கருப்பு நீர் சருமத்திற்கும் மிக ஆரோக்கியமானது என பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் கருப்பு தண்ணீர் குறித்த அதிகாரபூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதுதான்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு…!

sathya suganthi

ஷூட்டிங்கில் ஜன கன மன… புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய ஜெயம் ரவி!

Bhuvaneshwari Velmurugan

‘பிக்பாஸ்’ சீசன் 5-ல் பங்கேற்கும் ‘டிக்டாக்’ பிரபலம் ஜி.பி.முத்து? வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

“விஜய் ரியல் ஹீரோதான்!” – விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காயத்ரி ரகுராம்!

Lekha Shree

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் – குழந்தைகளை கொஞ்சும் வீடியோ வைரல்!

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டி – நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை..!

Lekha Shree

கொரோனா விதிமுறை மீறல் – நடிகர்கள் டைகர் ஷ்ராஃப், திஷா படானி கைது!

Lekha Shree

ஆட்டை பலி கொடுத்த ரசிகர்களால் ரஜினிக்கு வந்த சிக்கல்..!

suma lekha

இந்தியர்களை எப்படி மீட்பது.? : பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை.!

mani maran

ஓய்வு பெற்றது “வேகப்புயல்” : டேல் ஸ்டெயின் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

mani maran

இத்தாலியில் நடைபெற்ற மல்யுத்தத் தொடரில் தங்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா!

Lekha Shree

நிபா வைரசால் சிறுவன் பலி! கொரோனாவை அடுத்து புதிய அச்சுறுத்தல்!

Lekha Shree