மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…! முழு விவரம் உள்ளே..!


பிரஷ் ஜூஸ்கள் நம் உடலுக்கு உற்சாகம் அளிக்கும் பானங்கள். ஒரு பழத்தை அரைத்து குடிக்கும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து, நீர்ச்சத்து கிடைக்கிறது.

அந்த வகையில், மாதுளம் பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட நன்மைகள் உள்ளது. மாதுளம் பழ ஜூஸில் சர்க்கரை சேர்க்காமல் தினமும் குடித்து வந்தால் பல நன்மைகள் உண்டாகும்.

மாதுளை ஜூஸில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள பிரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகின்றன.

இது உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களை தடுக்க உதவுகிறது. தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பது புற்றுநோயை தடுக்க உதவும்.

Also Read  உடல் எடையை குறைக்க உதவும் 'Blue Tea'..! தயாரிப்பது எப்படி?

மாதுளம் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்தம் அடர்த்தியாவதை தடுக்கிறது. இதனால் இதயத்தில் அல்லது உடலின் வேறு எந்தப் பகுதியிலும் ரத்த உறைவு உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதுளம் பழ ஜூஸ் குடிப்பது ரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும்.

மாதுளம் பழத்தில் ஃபிளாவனால்கள் உள்ளன. இவை எலும்புகள் மற்றும் திசுக்கள் சேதப்படுவது மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்கள் ஆகியவற்றை தடுக்கும். மாதுளை ஜூஸ் தினமும் குடித்துவர எலும்பு பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் குறைவு.

Also Read  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை செய்தால் போதும்..!

மாதுளை சாறு இதயத்திற்கு சிறந்தது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், தமனிகள் தடிமனாகாமல் தடுக்கிறது. இந்த ஜூஸை தவறாமல் குடிப்பது தமனிகளில் பிளேக் மற்றும் கொலஸ்ட்ரால் வளர்வதை தடுக்கும்.

தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பது ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இதயம் தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கவும் உதவுகிறது.

Also Read  டயட்டில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய 6 காய்கறிகள்…! முழு விவரம் உள்ளே..!

மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது பெண்களின் கருவுறுதல் பிரச்னை மற்றும் விந்து செயலிழப்பு பிரச்சனையை சரி செய்ய உதவும்.

மாதுளையில் வைட்டமின் சி, ஈ இருப்பதால் அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், மாதுளம் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் செரிமானத்தை ஊக்குவிக்கும். அதனால் மலசிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை தடுக்க வல்லது இந்த மாதுளை ஜூஸ்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெங்கு பாதித்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

உடல் உஷ்ணம் குறைய சிறந்த உணவுப்பொருள் எது தெரியுமா?

Lekha Shree

கருப்பு பூஞ்சை நோய் – யாரை அதிகம் பாதிக்கும்?

Lekha Shree

தொப்பைக்கு குட்-பை சொல்ல நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்கள்!

Lekha Shree

உடல் எடையை குறைக்க உதவும் மாம்பழம்! நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்!

Lekha Shree

டயட்டில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய 6 காய்கறிகள்…! முழு விவரம் உள்ளே..!

Lekha Shree

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கீரை… முழு விவரம் இதோ..!

Lekha Shree

அடர்த்தியான தலைமுடி பெற உதவும் மூலிகை எண்ணெய்! வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க!

Lekha Shree

உடல் எடையை குறைக்க உதவும் ‘Blue Tea’..! தயாரிப்பது எப்படி?

Lekha Shree

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள்..!

Lekha Shree

World No Tobacco Day 2021: புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம்?

Lekha Shree

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்! மற்றுமொரு ஆபத்து… மக்களே உஷார்!

Lekha Shree