a

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!


காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் உண்டாகும். காலை ஒரு கிளாஸ் தண்ணீரை குடிப்பதால் நம்முடைய குடல் சுத்தம் செய்வதோடு உடம்பில் தேங்கி இருக்கும் நச்சுக்களும் வெளியேற்றபடுகிறது. செரிமான சக்தியும் அதிகரிக்கிறது.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது. அதனால் உடல் எடையும் நன்றாக குறைவதை காணலாம். தேவையற்ற கொழுப்புகளை தண்ணீர் குறைத்துவிடும்.

தண்ணீர் நமது உடலில் இருக்கும் நாள்பட்ட நச்சுப் பொருட்களை எல்லாம் சிறுநீரின் வழியாக முழுமையாக வெளியேற்றிவிடும். தண்ணீரை எவ்வளவு அதிகமாக குடிக்கின்றோமோ அவ்வளவும் நன்மை.

சிறுநீர் வழியாக தேவையற்ற நச்சுகள் வெளியேறி உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ளும். அதனால் தான் உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு அதிக தண்ணீர் குடிக்க அறிவுரைகள் வழங்கப்படுகின்றது.

Also Read  கோடை காலத்து சரும பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகள் இதோ…!

உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உண்ணும் உணவு விரைவாக ஜீரணம் ஆகும். உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கவும் தண்ணீர் உதவுகிறது.

இதனால் ஆரோக்கியம் மேம்படும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களுக்கு ஆக்சிஜன் அதிகப்படியாக கிடைப்பதன் மூலம் நம்முடைய உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்.

Also Read  கொரோனா தீவிரமாக இருக்கும் சமயம் அசைவ உணவுகளை சாப்பிடலாமா?

அல்சர் பிரச்னை வராமல் தடுக்க காலையில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உதவுகிறது. காலை உணவை தவிர்க்கும் நபர்கள் டீ, காபி மட்டும் குடிப்பதால் அல்சர் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் அல்சர் பிரச்னை உண்டாகும் வாய்ப்புகள் குறைவு.

காய்கறிகள், பழங்கள் என நாம் உண்ணும் உணவில் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தண்ணீர் மூலமாகவும் கிடைக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மையும் இந்த தண்ணீருக்கு உண்டு.

Also Read  கண்ணின் கருவளையத்தை விரட்ட எளிதான வழிமுறைகள்…!

முக அழகுக்கும் தண்ணீர் அவசியம். பொதுவாகவே குடல் சுத்தம் இல்லை என்றால் தான் முகத்தில் முகப்பரு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

தினம்தோறும் அதிக தண்ணீரை குடித்து உடலை சுத்தமாக வைத்திருந்தால் முகத்தில் எந்த ஒரு முகப்பருவும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. முகமும் பார்லர் போகாமலேயே பளபளக்கும். தண்ணீர் நம் தோலையும் மென்மையாக்கும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்த 3 அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்… உங்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கக்கூடும்..

Ramya Tamil

ஆரஞ்ச் பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

Lekha Shree

குடல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் உணவு வகைகள்…!

Lekha Shree

முகப்பரு நீங்க இந்த ஒரு பொருள் போதும்…!

Lekha Shree

ஏசி இருந்தால் தான் தூக்கம் வருமா? முதலில் இந்த செய்தியை படிங்க!

Lekha Shree

கொரோனா தீவிரமாக இருக்கும் சமயம் அசைவ உணவுகளை சாப்பிடலாமா?

Lekha Shree

கோடையில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை போக்க சில எளிய டிப்ஸ்…!

Lekha Shree

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க!

Lekha Shree

வேர்க்குரு பிரச்சனைக்கு எளிய தீர்வுகள் இதோ…!

Lekha Shree

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் பேஸ்பேக்குகள்…!

Lekha Shree

நாவல்பழ விதைகளால் இவ்வளவு நன்மைகளா?

Lekha Shree

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள்..!

Lekha Shree