மத்திய பிரதேசத்தில் விளையும் சிவப்பு நிற வெண்டைக்காய்…! இதை சாப்பிடுவதால் என்ன நன்மை?


மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டம் கஜூரி கலன் பகுதியை சேர்ந்த விவசாயி மிஸ்ரிலால் ராஜ்புத் என்பவர் தனது தோட்டத்தில் சிவப்பு நிற வெண்டைக்காயை விளைவித்து அதிக லாபம் ஈட்டி வருகிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “வழக்கமான பச்சை நிற வெண்டைக்காயை விட சிவப்பு நிற வெண்டைக்காய்க்கு மவுசு அதிகம். இந்த சிவப்பு நிற வெண்டைக்காயை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறைகிறது.

Also Read  "இந்தியாவில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்" - பிரகாஷ் ஜவடேகர்

இந்த நிற வெண்டைக்காய் விதைகளை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள வேளாண் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஒரு கிலோ வாங்கி வந்து எனது தோட்டத்தில் விதைத்தேன்.

செடிகள் 40 நாட்களிலேயே வளர ஆரம்பித்துவிட்டன. இதற்கு பூச்சி மருந்துகள் எதையும் தெளிக்கவில்லை. இந்த நிற வெண்டைக்காயில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி உள்ளன.

Also Read  இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் - இந்தியா புறக்கணிப்பு!

மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைப்பதால் இதை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

இந்த சிவப்பு நிற வெண்டைக்காய் இதய நோய் உள்ளாவர்கள், கொழுப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு அருமருந்தாக உள்ளது.

Also Read  “நடப்பாண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” - மத்திய அரசு

டெல்லி மார்க்கெட்டில் சிவப்பு நிற வெண்டைக்காய் கால் கிலோ ரூ.75 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது.
சில வணிக வளாகங்களில் இந்த வெண்டைக்காய் ஒரு கிலோ 800 வரை விற்பனை செய்யப்படுகிறது” என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி போட எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்..?

Ramya Tamil

இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல்.

Tamil Mint

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

Tamil Mint

ஆக்கர் கடையில் சாக்கு பைகளில் கண்டெடுக்கப்பட்ட 306 ஆதார் கார்டுகள்! கேரளாவில் பரபரப்பு!

Tamil Mint

ஒரே ஒரு சூப் போதும்… உடலில் ஒரு பிரச்சனையும் ஏற்படாது… தினசரி கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டுமாம்…!

VIGNESH PERUMAL

கொரோனா பாதித்தவர்கள் 3 மாதம் கழித்தே தடுப்பூசி போட வேண்டும்.. மத்திய அரசு..

Ramya Tamil

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்..!

Lekha Shree

மிகப்பெரிய திட்டம் ஒன்றினை கொண்டு வரப் போகிறோம்: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆருடம்.

mani maran

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

“விரைவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி” – முழு விவரம் இதோ…!

sathya suganthi

உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

Devaraj

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint