a

வெப்பத்தில் இருந்து தப்பிக்க இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்கள்…!


கோடை காலம் வந்தாலே மக்கள் விடுமுறை நாட்களில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவது வழக்கமாகி வருகிறது.

அப்படி மக்கள் சென்று ரிலாக்ஸ் செய்து வர ஏதுவான இந்திய சுற்றுலா தலங்கள் சிலவற்றை பார்ப்போம்.

கூர்க் (குடகு)

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுவது கூர்க். இந்த இடம் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக உள்ளது. வெளிநாட்டினர் முதல் உள்ளூர் மக்கள் வரை இந்த பகுதியில் நிலவும் குளிரான பருவநிலையை அனுபவித்து செல்கின்றனர்.

கோடை காலத்தில் குளிரான பகுதிக்கு செல்ல விரும்புவோர் கூர்க்குக்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

ரிஷிகேஷ் (உத்தரகாண்ட்)

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் உலகின் யோகா தலைநகரம் என அழைக்கப்படுகிறது. ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் சென்று வரும் தலமாக இந்த ரிஷிகேஷ் உள்ளது.

கங்கை ஆறு மற்றும் பசுமையான மலைப்பகுதிகள் என ரிஷிகேஷில் அழகு ‘ஆஹா’ ரகம். இந்த கோடை விடுமுறைக்கு சென்று ரிலாக்ஸ் செய்து தியானம் மேற்கொள்ள பெஸ்ட் இடம் ரிஷிகேஷ்.

Also Read  ராமேஸ்வரம் பற்றி 120 தகவல்கள்

தவாங் மற்றும் நைனிடால் (அருணாச்சல பிரதேசம்)

இந்த தவாங் பகுதியில் புத்த மடாலயங்கள் அதிகமாக உள்ளன. இங்கு காணப்படும் இயற்கை எழில்கள் கண்களுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த இடத்திற்கு சுற்றுலா செல்வது சிறப்பு.

ஊட்டி (தமிழ்நாடு)

நைனிடாலில் இரவு நேரங்கள் ரம்மியமாக இருக்கும். அழகான மலைப்பகுதி, ஏரிகள் என நைனிடால் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.

தென் இந்தியாவின் முக்கியமான கோடை வாசஸ்தலமாக ஊட்டி பார்க்கப்படுகிறது. இது உலகின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.

Also Read  தாஜ்மஹாலை இழுத்து மூடிய காவல்துறை...

இங்குள்ள வண்ண வண்ண பூக்கள், காட்டேஜ்கள், சர்ச், உயிரியல் பூங்காக்கள் அனைத்தும் மக்களை கவரும் வண்ணம் இருக்கும்.

டார்ஜிலிங் (மேற்கு வங்கம்)

இமயமாலையின் அழகு கொஞ்சும் டார்ஜிலிங்கில் சுற்றியுள்ள தேயிலை தோட்டங்கள் கண்களுக்கு விருந்து அளிக்கின்றன.

மே மற்றும் ஜூன் மாதங்கள் டார்ஜிலிங் செல்ல ஏதுவான மாதங்கள்.

மூணாறு (கேரளா)

மூணாறு கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலம் ஆகும். கடவுளின் அருள் பெற்ற இடம் என்று கேரளா புகழப்படுகிறது.

மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் சுற்றுலா தலங்களுள் ஒன்று மூணாறு.

Also Read  2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசம்; அசத்திய இந்தியா!

பஹல்காம் (காஷ்மீர்)

இந்த பகுதியில் 20 ஏரிகள் உள்ளது. அதனால், மக்கள் வெப்பத்தை எதிர்கொள்ள இந்த சுற்றுலா தலத்திற்கு சென்று வருகின்றனர்.

மணாலி (ஹிமாச்சல பிரதேசம்)

டிரெக்கிங், பாராகிலைடிங், ராஃப்டிங் போன்ற சாகசங்களை செய்து மகிழ மணாலிக்கு செல்லலாம். கோடையை த்ரில்லிங்காக கழிக்க இந்த பகுதிக்கு செல்லலாம்.

அந்தமான் நிகோபார் தீவுகள்

மன அமைதி மற்றும் சாகசங்கள் செய்து பொழுதை கழிக்க சிறந்த கோடை சுற்றுலா தலம் இது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு வந்து கோடை விடுமுறையை கழிப்பர்.

கோடையை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்க இந்த பகுதிகளுக்கு ஒரு முறை சென்று வரலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள உலக அதிசயத்தின் கதவுகள்…!

Lekha Shree

பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வுக்கு காரணம் இது தானா????

Devaraj

310 கி.மீ நீள நீர்வழித்தடத்தில் சூரியசக்தி படகில் பயணம் செய்த முதல்வர்!

Tamil Mint

உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை இந்தியாவில் அமைக்க திட்டமிடும் முகேஷ் அம்பானி!

Lekha Shree

ராமேஸ்வரம் பற்றி 120 தகவல்கள்

Tamil Mint

தாஜ்மஹாலை இழுத்து மூடிய காவல்துறை…

Devaraj

சுற்றுலா பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும்! – மால்டா அரசு அதிரடி அறிவிப்பு!

Lekha Shree